வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

ரஜினி, கமல் படங்களில் எங்களுக்கு முக்கியத்துவம் இருக்காது.. சாய் பல்லவி போல் தெரிந்து ஓடும் 5 ஹீரோயின்கள்

Actress Sai Pallavi: தன் நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் இரு பிரபலங்கள் தான் ரஜினி மற்றும் கமல். அவ்வாறு இருக்க, தற்பொழுது இளம் ஹீரோயின்கள் இவர்களின் படங்களை கண்டு தெரிந்தோடும் காரணம் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

தன் தனிப்பட்ட திறமையால் முன்னேறிய இவர்கள் இன்று வரை இளம் நடிகர்களுக்கு போட்டியாய் நடித்து வருகின்றனர். அவ்வாறு இருக்க இவர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்காதவர்களே இருக்க முடியாது.

Also Read: இழுபறியில் இருக்கும் லியோ பிசினஸ்.. ரெட் ஜெயண்டை ஓரம் கட்டியதால் சூட்சமம் செய்யும் டாப் நிறுவனம்

இது ஒரு புறம் இருக்க, இது போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும், தாங்கள் ஏற்கும் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படாது என்பதற்காக இவர்களின் படங்களை கண்டு தெரிந்து ஓட முடிவு எடுத்துள்ளனர்.

அவ்வாறு பார்க்கையில் அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் இடம் பெற்றிருப்பார். மேலும் தற்பொழுது கமல் நடிப்பில் வெளிவர இருக்கும் இந்தியன் 2 வில் ப்ரியா பவானி சங்கர் இடம் பெறுவதாக கூறப்படுகிறது.

Also Read: 75 படங்கள் இயக்கி சாதனை படைத்த இயக்குனர்.. ஆலமரம் போல் சிவாஜியை வளர்த்த டைரக்டர்

இருப்பினும் அதை குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை இல்லாத நிலையில், இவரின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படாததால் எதிர்காலத்தில் இது போன்ற படங்களை தவிர்க்க இத்தகைய முடிவை எடுத்து வருகின்றனர்.

இந்த வரிசையில் சாய் பல்லவியை தொடர்ந்து டாப்ஸி, நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராசி கண்ணா ஆகிய ஐந்து முன்னணி ஹீரோயின்கள் இது போன்ற முடிவுகளில் உறுதியாக இருக்கின்றனர். மேலும் ரஜினி- கமல் படங்களில் நடிக்க அதிக பேமெண்ட் கொடுத்தாலும், முதன்மை கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத இவர்களின் படங்களில் நடிக்க விருப்பமில்லாததால் இது போன்ற முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

Also Read: தனுஷுக்கு இருக்கும் கெட்ட பழக்கத்தை அம்பலப்படுத்திய ரோபோ சங்கர்.. வாயக் கொடுத்து மாட்டிக்கிட்டியே பங்கு

- Advertisement -spot_img

Trending News