காந்தி டாக்ஸ் - ZEE5 (மார்ச் 6 முதல்)

வேலையில்லாத இளைஞன் ஒருவனுக்கும், ஒரு பெரும் செல்வந்தருக்கும் இடையே நடக்கும் பணப்பரிமாற்றமும், அதன் பின்னணியில் இருக்கும் சமூக முரண்பாடுகளுமே கதை.

ஜாக்கி - Amazon Prime Video (மார்ச் 6 முதல்)

மதுரையின் நிலத்தடி உலகத்தை மையமாகக் கொண்ட ஒரு ஆக்ஷன் டிராமா. அம்மு அபிராமி மற்றும் யுவன் கிருஷ்ணா இதில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

ஓச்சாயி - கிரானி - Sun NXT

லண்டனில் இருந்து ஊருக்கு வரும் ஒரு குடும்பம், தங்கள் பூர்வீக வீட்டில் தஞ்சம் புகும்போது, அங்குள்ள ஒரு மர்மமான மூதாட்டியால் (ஓச்சாயி) சந்திக்கும் அமானுஷ்ய சம்பவங்களே கதை. குடும்பத்துடன் அமர்ந்து பயந்து ரசிக்க இது ஒரு சிறந்த சாய்ஸ்.

சுபேதார் - Amazon Prime Video (மார்ச் 5 முதல்)

பாலிவுட் ஸ்டார் அனில் கபூர் நடிப்பில் வெளியான ஆக்ஷன் த்ரில்லர். ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தனது மகளுக்காகவும், சமூக அநீதிக்கு எதிராகவும் போராடுவதே இதன் கரு.

வித் லவ்- Netflix

அனஸ்வரா ராஜன் மற்றும் அபிஷன் ஜீவிந்த் நடிப்பில் உருவான ஒரு அழகான 'பீல் குட்' (Feel-good) காதல் கதை.

Read Full story