Vidaamuyarchi: விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகி நான்கு நாட்கள் ஆகி இருக்கிறது. படம் திரைக்கதை அளவில் ரசிகர்களிடம் ஜெயித்து விட்டது.
ஆனால் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் அஜித் தன்னுடைய மாஸ் மற்றும் கிளாஸ் இல்லாமல் நடித்திருப்பது தான்.
அஜித் போன்ற ஒரு ஹீரோ இப்படி நடிக்கலாமா என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கெல்லாம் பதில் மலையாள திரைப்படங்களின் எதார்த்தமான கதைகளம் தான்.
சம்பவம் செய்யும் விடாமுயற்சி
அப்படி ஒரு கதை களத்தை தான் அஜித் இந்த படத்தில் தேர்ந்தெடுத்து இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ஒரு கூட்டம் விடாமுயற்சி படம் தோல்வி படம் என ஆதாரத்துடன் நிரூபிக்க போராடிக் கொண்டிருக்கிறது.
இதற்கு அவர்கள் கையில் எடுத்திருக்கும் விஷயம் தான் ஆன்லைன் டிக்கெட் புக்கிங்.
சில வெப்சைட்டுகளின் டிக்கெட் புக்கிங் நிலவரத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்து விடாமுயற்சி படம் தியேட்டரில் காத்து வாங்குகிறது என்பது போல் உருவகப்படுத்துகிறார்கள்.
உண்மையில் தியேட்டருக்கு நேராக சென்று கவுண்டர் புக்கிங் மூலம் படத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு போகும் கூட்டம் வார இறுதி நாட்களில் அதிகமாகி கொண்டு இருக்கிறது.
உண்மையை சொல்லப்போனால் பெரும்பாலான தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக விடாமுயற்சி படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.
பொதுவாக பெரிய ஹீரோக்கள் விழாக்கால விடுமுறையை தேர்ந்தெடுத்து ஒரு ஐந்து ஆறு நாட்கள் தொடர் விடுமுறை இருக்கும் நாளில் தான் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.
ஆனால் அஜித் வார விடுமுறையை கூட எதிர் நோக்காது வியாழக்கிழமை படத்தை ரிலீஸ் செய்தார். இதனால்தான் வெள்ளிக்கிழமை படத்திற்கான கூட்டம் கொஞ்சம் அடி வாங்கியது.
எந்தவித எதிர்பார்ப்புகளையும் தன்னுடைய ரசிகர்களுக்கு கொடுக்காமல் சைலன்ட் மோடில் சம்பவம் செய்து கொண்டிருக்கிறார் அஜித்.