சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கிரிக்கெட்டில் இருந்து திடீரென்று ஓய்வுவை அறிவித்த டான்சிங் பிளாக்கி.. 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்னரே அதிர்ச்சி தகவல்.!

மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. மழை காரணமாக மூன்று போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஒரேயொரு டி20 போட்டி மட்டுமே முழுமையாக நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரைக் கைப்பற்றியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரூம், நட்சத்திர வீரரான டுவைன் பிராவோ திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தார். ஏற்கனவே ஒரு நாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் திடீரென இந்த முடிவை எடுத்துள்ளார்.

Dwane-Bravo-Cinemapettai.jpg
Dwane-Bravo-Cinemapettai.jpg

பாகிஸ்தானுக்கு எதிரான இருபது-20 தொடரில் விளையாடிக் கொண்டிருந்தார் டுவைன் பிராவோ. இதனால் அந்த அணிக்கு எதிரான 4ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி டுவைன் பிராவோவுக்கு வழியனுப்பும் போட்டியாக இருந்தது.

ஆனால் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டதால் அவரால் பவுலிங், பேட்டிங், பீல்டிங் என எதையும் செய்ய இயலவில்லை. டான்ஸ் ஆடுவதில் வல்லவரான பிராவோ மொத்தம் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2200 ரன்கள் மற்றும் 86 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

164 ஒருநாள் போட்டிகளில் 2968 ரன்கள் மற்றும் 199 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 85 டி20 போட்டிகளில் 1229 ரன்களும், 76 விக்கெட்களையும் சாய்த்துள்ளார்.

Trending News