வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024

என்னது, 9500 வருஷங்கள் பழைமையான நகரமா! இந்தியால எங்க இருக்கு தெரியுமா?

இந்தியா என்றாலே எல்லொருக்கும் தெரிந்த விஷயம் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட பழமையான நாடு. இந்தியாவின், ஹரப்பா, மொகஞ்சதாரோ, சிந்து சமவெளி நாகரீம், தோன்றி உலகின் பல பகுதிகளில் நாகரீகம் அடைவதற்கு முன்னமே கட்டிடக் கலையிலும், நாகரீகத்திலும் சிறந்து விளங்கியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்,.

அதேபோல், இந்தியாவில் இருந்த லெமூரியா கண்டம் கடலுக்கு அடியில் மூழ்கி பெரும் அறிவு சார்ந்த பொக்கிசங்கள் எல்லாம் அழிந்துபோனதாக பலரும் கூறுகின்றனர். இந்த நிலையில், உலகின் பழையான நாகரீகம் இந்தியாவில் தோன்றியதாக வரலாற்று அறிஞர்கள் ஒப்புக் கொள்ளும் நிலையில், இதெல்லாவற்றையும் விட துவாரகா நகரம் நீருக்கடியில் மூழ்கியதாக தேசிய கடல் தொழில் நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

காம்பே வளைகுடாவில் துவாரகா நகரம் கண்டுபிடிப்பு

இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள காம்பாட் வளைகுடா – காம்பே வளைகுடாவின் கீழ்தான் இந்த பழமையான நகரம் என்று கூறப்படும் துவாரகா நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து மனித எலும்புகள், கட்டுமானம், அவர்கள் பயன்படுத்திய கலன்கள், மண்பாண்டங்கள், வேட்டைக்கு பயன்படுத்திய பொருட்கள், கல் போன்றவை இதில் சான்றுகளாக கிடைத்துள்ளன.

அதன்மூலம், துவாரகா நகரத்தில் இருந்த சான்றுகளின் அடிப்படையில் பார்த்தால், மொகஞ்சதாரோ, ஹரப்பா, மெசபடோமியா மற்றூம் எகிப்து ஆகிய நாகரீகங்களைவிட இது பழையமானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

கேம்பே நாகரீகம் எனப்படும் தண்ணீருக்கு அடியில் நகரமான துவாரகா கடந்த 2001 ஆம் ஆண்டு, தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனமான NIOT கடலில் ஆய்வுகள் மேற்கொண்டிருக்கும்போது, இதைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தது. அதன்படி, இப்பகுதியில் சோனார் ஸ்கேன்கள் நடத்தப்பட்டது. அதில்தான் பல ஆச்சர்யமூட்டும் வகையில், கட்டிடம் வடிவம், மக்களின் நகர வடிவமைப்பு, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் இதெல்லாம் வெளிப்படுத்தியது.

9500 ஆண்டுகள் பழமையான நகரம்

இங்கிருந்து பெறப்பட்ட பொருட்கள் கலைப்பொருட்கள் கார்பன் டேட்டிங் இந்த நகரம் 9500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் எனப் பரிந்துரை செய்துள்ளது. எனவே சிந்து சமவெளி, ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரீகத்துக்கும் மூத்ததாக இந்த துவாரகா நகரம் எல்லோரையும் பேச வைத்துள்ளது. இதுகுறித்து மேலும் கார்பன் டேட்டிங் துல்லியமாக ஆய்வு செய்து இதன் உண்மையான காலக்கட்டத்தை தெரியப்படுத்தும் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும், 10000 – 8000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கேம்பே வளைகுடா, பனியுகத்தின் போது கடல் மடத்திற்கு மேல் இருந்திருக்கலாம். அதன்பின், பனிக்கட்டிகள் உருகியதால் கடல் மட்டமும் உயர்ந்து கடலோரப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கியிருக்கலாம். அப்படித்தான் துவாரகா நாகரீகம் நீருக்கடியில் முழ்கியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

gulf-of-khambat

- Advertisement -spot_img

Trending News