வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஷால் என்னைய பரதேசினு தான் கூப்பிடுவாரு.. வெளிப்படையாக பேசிய வைரல் நடிகை

Actor Vishal: நடிகர் விஷால் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நிலையில் இப்போது அவரது மார்க்கெட் சரிவை சந்தித்து இருக்கிறது. தொடர்ந்து அவரது படங்கள் படுதோல்வி அடைந்து வந்த நிலையில் லத்தி படம் ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்றது. இப்போது அவருடைய துப்பறிவாளன் 2 படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் எப்படியும் மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என அடுத்தடுத்த படங்களில் விஷால் ஒப்பந்தமாகி வருகிறார். இந்நிலையில் வைரல் நடிகை ஒருவர் விஷால் பற்றி கூறிய விஷயம் தான் இப்போது யூடியூபில் வைரலாகி வருகிறது. அதாவது விஷால் நடிப்பில் வெளியான படம் வீரமே வாகை சூடும்.

Also Read : திரும்பவும் அனகோண்டாவை வைத்து கல்லா கட்ட நினைக்கும் விஷால்.. மார்க் ஆண்டனிக்கு சத்தமாய் ஊதிய சங்கு

இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீனா ரவி. இவர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து வெளியான லவ் டுடே படத்தில் யோகிபாபு ஜோடியாக நடித்திருந்தார். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாக காரணமாக இருந்த படம் உதயநிதி, பகத் பாசில் நடிப்பில் வெளியான மாமன்னன் படம் தான்.

டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இருந்தும் மாமன்னன் படத்தில் ஒரு டயலாக் கூட ரவீனா ரவிக்கு இல்லை. ஆனாலும் பகத் பாசில் மற்றும் ரவீனா ரவி இடையே உள்ள கெமிஸ்ட்ரி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆகையால் ரவீனா ரவி பேட்டி கொடுத்த வீடியோக்கள் தான் இப்போது இணையத்தில் அதிகம் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

Also Read : என்னது எனக்கும் மேனனுக்கும் கல்யாணமா.? பதறிப்போய் வதந்திக்கு பதிலடி கொடுத்த விஷால்

அந்த வகையில் வீரமே வாகை சூடும் படப்பிடிப்பில் விஷால் தன்னை பரதேசினு தான் கூப்பிடுவார் என ரவீனா ரவி கூறியிருக்கிறார். அது ஏன் என்று தெரியவில்லை, ஆனால் என்னிடம் அதிக அக்கறை காட்டுவார். மேலும் மூஞ்சில் சேற்றை பூசுவது என விஷால் என்னிடம் விளையாடுவார்.

ஆனால் அவரைப் போல ஒரு மனிதரைப் பார்க்க முடியாது என பெருமையாக ரவீனா ரவி கூறி இருக்கிறார். இவர் இவ்வாறு சொல்லி இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. மேலும் தொடர்ந்து ரவீனா ரவிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். ஆரம்பத்தில் நடிப்பதற்கு விருப்பம் இல்லாமல் இருந்த ரவீனா ரவி இப்போது நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு பிசியாக இருக்கிறார்.

Also Read : இயக்குனரா புடிச்சாலும், தயாரிப்பாளரா மன்னிக்கவே மாட்டேன்.. அந்நியன் போல் ஆக்ரோசமாக மாறிய விஷால்!

Trending News