புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பணத்தாசையால் அனிருத் செய்த காரியம்.. இவ்வளவு கீழ இறங்கிட்டாரு

Anirudh: தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவரில் அனிருத்துக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அதுவும் குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்களை மட்டும் தான் தற்போது அனிருத் கைவசம் வைத்துள்ளார். அதன்படி விஜய்யின் லியோ படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளராக இருக்கிறார்.

அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திற்கும் அனிருத் இசை தான். சமீபத்தில் இப்படத்தின் காவாலா மற்றும் ஹூக்கும் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் வைரலானது. அதுமட்டுமல்லாமல் அடுத்ததாக அஜித் மகிழ்திருமேனி கூட்டணியில் உருவாகும் விடாமுயற்சி படத்திற்கும் அனிருத் தான் இசை.

Also Read : லியோவுக்கு ஜெயிலர் கொடுத்த அதிர்ச்சியே இன்னும் குறையல.. சூடு ஆறும் முன் போட்டிக்கு வந்த சூர்யா

மேலும் பெரிய நடிகர்களின் பட வாய்ப்பு அடுத்தடுத்து வந்தாலும் அனிருத் இவற்றையெல்லாம் நிராகரித்து வருகிறாராம். ஏனென்றால் பல்வேறு வெளிநாடுகள் சென்று அனிருத் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். கைவசம் முன்னணி நடிகர்கள் இருப்பதால் நேர பற்றாக்குறை காரணமாக பல பட வாய்ப்புகளை நிராகரித்து விட்டார்.

ஆனால் இப்போது பணத்தாசையால் அனிருத் ஒருவேளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பிரபல யிடியூபர் டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது. இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது.

Also Read : லியோ படப்பிடிப்பில் கோபத்துடன் வெளியேறிய விஜய்.. பாவம் படக்குழு ஆசைப்பட்டு கேட்டதால் வந்த விளைவு.!

இந்த சூழலில் மஞ்சள் வீரன் படத்தில் டிடிஎஃப் வாசனை அறிமுக பாடலை அனிருத் பாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது முன்னணி ஹீரோக்களுக்கு கூட அனிருத் இவ்வாறு செய்யாத நிலையில் இப்போது டிடிஎஃப் வாசனுக்கு மட்டும் ஏன் இன்றோ சாங் பாடுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதாவது பணத்திற்கு ஆசைப்பட்டு தான் அனிருத் இவ்வாறு செய்துள்ளார் என்று கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அனிருத் ரசிகர்களே யார் என்ன சொன்னாலும், எவ்வளவு கொடுத்தாலும் அனிருத் இதை செய்திருக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Also Read : இசைப்புயலை மிஞ்சிய அனிருத்.. ஜவான் படத்துக்கு இசையமைக்க இத்தனை கோடி சம்பளமா?

Trending News