புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சக்களத்தி பெண்ணாக இருந்தாலும் விட்டுக் கொடுக்காத பாக்யா.. மயூக்காக செய்த விஷயம்

Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் இப்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கோபியை போலவே அவரது மகன் செழியனும் மனைவி இருக்கும் போதே வேறு ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி வருகிறார். இதனால் பாக்கியலட்சுமி குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க இருக்கிறது.

ஒருபுறம் ராதிகாவின் மகள் மயூ பெரிய மனுஷி ஆகியதால் அவரது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனால் இனியாவின் டூருக்கு கோபி சொல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க கோபி தனது பெற்றோரை மயூவின் நிகழ்ச்சிக்காக அழைக்க வந்திருக்கிறார். அப்போது ஈஸ்வரி கண்டபடி கோபியை திட்டி விடுகிறார்.

Also Read : விஜய் டிவி, சன் டிவி சீரியல் நடிகையை புரட்டி எடுக்க நினைத்த தயாரிப்பாளர்.. பகீர் கிளப்பிய சமீபத்திய பேட்டி

இதைத்தொடர்ந்து பாக்யா எப்போதுமே மயூ மீது தனி பாசம் வைத்திருப்பார். தன்னுடைய சக்காளத்தி ராதிகாவின் மகளாக இருந்தாலும் அவரின் எல்லா விஷயங்களுமே பாக்யா விட்டுக் கொடுத்து செல்வார். அதன்படி தனது மாமனார் மற்றும் மாமியாரிடம் கண்டிப்பாக மயூவை பார்த்து வாழ்ந்து விட்டு வர வேண்டும் என்று கூறுகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் மயூக்கு லட்டும் செய்து கொடுத்திருக்கிறார். மேலும் கோபியின் அப்பா மற்றும் அம்மா இருவரும் வந்தது ராதிகாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி கொடுத்திருக்கிறது. ஆனால் பாக்யா வராததால் மயூ வருத்தப்பட்டு அவருக்கு போன் செய்கிறார். அப்போது பாக்யா தன்னால் வர முடியவில்லை என்றாலும் நீ சந்தோசமாக இருந்தால் போதும் என்று கூறுகிறார்.

Also Read : டிஆர்பி கிங்கை வளைத்துப் போட்ட விஜய் டிவி.. ரெக்கார்டை உடைக்க போகும் பிக் பாஸ் சீசன் 7

ஆகையால் பாக்யா மற்றும் மயூ இடையே இருக்கும் பிணைப்பை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ராதிகா பாக்யாவை என்னதான் எதிரியாக பார்த்தாலும் அவரது குழந்தை மீது தனி அக்கறையுடன் இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் ராதிகாவும் தனது மகளை மிகவும் அருமையாக வளர்த்து வருகிறார்.

இவ்வாறு பாக்கியலட்சுமி தொடரில் நிறைய பிரச்சனை இருந்தாலும் சில காட்சிகளை பார்க்கும் போது நெகிழ வைக்கிறது. அப்படிதான் வருகின்ற எபிசோடில் பாக்யா மற்றும் மயூ இடையேயான காட்சிகள் ரசிகர்களை கவர இருக்கிறது. ஆனாலும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்து அரங்கேற இருக்கிறது.

Also Read : தேய்ந்துபோன டேப் ரெக்கார்டு சீரியலை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவியின் புத்தம் புதுத் தொடர்கள்.. விறுவிறுப்பாக சூடு பிடிக்கும் 5 நாடகங்கள்

Trending News