திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

OTT வியாபாரத்திற்காக கோப்ரா தயாரிப்பாளர் செய்த காரியம்.. கெஞ்சி வாங்கிய தணிக்கை சான்றிதழ்

இரண்டு நாட்களுக்கு முன் வெளியான கோப்ரா படத்திற்கு சிக்கலுக்கு மேல் சிக்கல் தான் வந்து கொண்டிருக்கிறது. இப்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் செய்த தில்லு முல்லு வேலை ஒன்று அம்பலமாகி இருக்கிறது.

பொதுவாக எல்லா படங்களும் தணிக்கை குழுவினால் தணிக்கை செய்யப்பட்டு U, A, U/A சர்டிபிகேட்டுகளுடன் வரும். U என்றால் குழந்தைகளும் பார்க்க கூடிய படம், A என்றால் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே பார்க்க முடியும், U/A என்றால் குழந்தைகளும் பெரியவர்களும் பார்க்க கூடிய படம். அதிக அடல்ட் காட்சிகள், வன்முறைகள் இருந்தால் படத்திற்கு A சான்றிதழ் தான் கிடைக்கும்.

Also Read :கோப்ரா பட தோல்வியை அன்றே கணித்த விஜய்.. பாம்பு ரொம்ப நேரம் படம் எடுத்தா கீறி கிட்ட தோத்து போகும்

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த கோப்ரா படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழையே வழங்கி இருக்கிறது. தணிக்கை சான்றிதழை வாங்கியதாக அறிவித்த படக்குழு என்ன சான்றிதழ் என்று சொல்லவில்லை. உண்மையிலேயே கோப்ரா படத்திற்கு A சான்றிதழ் தான் கிடைத்திருக்கிறது.

இந்த படத்திற்கு U/A சான்றிதழ் வாங்க அந்த படத்தின் தயாரிப்பாளரான லலித் மிகவும் போராடியிருக்கிறார். இந்த படத்தின் விக்ரம் கேரக்டரினால் A சான்றிதழ் தான் கொடுக்க முடியும் என்று தணிக்கை குழு சொல்ல, கௌதமி தலைமையிலான ரிவைஸில் கமிட்டிக்கு படத்தை அனுப்பி வைத்து எப்படியோ ஒரு வழியாக U/A சான்றிதழ் பெற்று இருக்கிறார்கள்.

Also Read :தோல்வியை ஒப்புக் கொண்ட கோப்ரா படக்குழு.. முன்னாடியே இத பண்ணியிருந்தா தல தப்பி இருக்கும்

இதற்கு காரணம் தயாரிப்பாளர் லலித்தின் பண ஆசை தான். முன்னெல்லாம் பட ரிலீசிற்கு பிறகு அந்த படத்தை தொலைக்காட்சிகளுக்கு விற்று விடுவார்கள். இப்போது எல்லாம் படங்கள் ரிலீஸ் ஆகி ஆறு மாதத்திற்குள் OTT நிறுவனங்களுக்கு அந்த படத்தை நல்ல தொகைக்கு விற்று விடுகிறார்கள்.

U மற்றும் A சர்டிபிகேட் படங்களுக்கு OTT யில் மிக குறைந்த தொகையே பேசி விற்கப்படுகிறது. U/A சர்டிபிகேட் படங்களே OTT யில் நல்ல விற்பனைக்கு செல்கிறது. இதனால் தான் படத்தின் தயாரிப்பாளர் லலித் இவ்வளவு போராடி U/A சர்டிபிகேட் வாங்கி இருக்கிறார்.

\Also Read :நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி கோப்ரா செய்த முதல் நாள் வசூல்.. இத்தனை கோடியா?

Trending News