வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நான் என்ன செஞ்சா உங்களுக்கு என்ன?. வெறுப்பாகி கடுப்பில் கத்திய ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமலஹாசனின் மூத்த வாரிசாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தனது முதல் படத்திலிருந்து திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால் அதன் பின்பு அவர் தேர்ந்தெடுத்த படங்கள் சரியாக போகாத காரணத்தினால் தெலுங்கில் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்.

இதைத்தொடர்ந்து ஸ்ருதிஹாசன் சமூக வலைத்தளங்களில் சில பதிவுகளை போட்டு சர்ச்சையில் சிக்கி வந்தார். இந்நிலையில் தற்போது நடந்த ஒரு நிகழ்வினால் ஸ்ருதிஹாசன் மிகுந்த கடுப்பாகி ஒரு பதிவை போட்டுள்ளார். தற்போது ஸ்ருதிஹாசன் சலார் என்ற படத்தில் நடித்த வருகிறார்.

Also Read :வாய்ப்பு வரும்போது வரட்டும் என தெனாவட்டு காட்டும் 5 ஹீரோயின்ஸ்.. ஸ்ருதிஹாசன் லிஸ்டில் சேர்ந்த நடிகைகள்

இந்த சூழலில் ஸ்ருதிஹாசன் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இதற்காக ஸ்ருதிஹாசனை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இது பற்றி அவர் கூறுகையில் யார்கிட்டயும் என்னை பற்றி நியாயப்படுத்த நான் விரும்பவில்லை. ஒவ்வொருவருக்கும் தனது உடலில் மாற்றம் செய்யக்கூடிய உரிமை உள்ளது.

எனது மூக்கு சற்று வித்தியாசமாக காட்டப்பட்டதால் நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். உங்களுக்கு எது செய்ய விருப்பமோ அதை செய்யுங்கள். உங்களுக்கு விருப்பமில்லை என்றால் யார் வற்புறுத்ததில் பெயரிலும் செய்ய வேண்டாம் என ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டார்.

Also Read :சும்மாவே இருக்க மாட்டீங்களா.. சமுகவலைத்தளத்தில் லைவில் வந்து குமுறிய ஸ்ருதிஹாசன்

மேலும், நான் சினிமாவுக்கு வந்த புதிதில் என்னை ஒரு ஹீரோயின் போன்ற தோற்றமே இல்லை என கிண்டல் அடித்தார்கள். அது மட்டும் இன்றி தமிழ்நாட்டு பெண்ஸபோல இவரது தோற்றம் இல்லை, வெளிநாட்டு பெண் சாயலில் இருக்கிறார் என கூறினார்கள். ஆனால் நான் பெரும்பாலும் கிராமத்து கேரக்டர்களில் தான் நடித்திருந்தேன்.

இவ்வாறு கேலி செய்ய வேண்டும் என்ற நினைப்பவர்கள் தொடர்ந்து இதுபோன்று ஏதாவது ஒன்று சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். நமக்கு ஒன்று தேவைப்பட்டால் அதை செய்வதில் நம்முடைய விருப்பம் மட்டும் இருந்தால் போதும் என ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

Also Read :நடிப்பையே மறந்த ஸ்ருதிஹாசன்.. ரீஎன்ட்ரியாவது கைகொடுக்குமா?

Trending News