திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிரின்ஸ் பட தோல்வியால் மாவீரன் படத்திற்கு என்ன ஆச்சு? பரிதவிக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவான படம் பிரின்ஸ். சமீபத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்தார் படத்திற்கு போட்டியாக பிரின்ஸ் படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் தந்தது.

பிரின்ஸ் படம் வசூலிலும் மிகப்பெரிய அடி வாங்கியது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் மற்றும் மாவீரன் படம் உருவாகி வருகிறது. மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அதிதி சங்கர், மிஷ்கின் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Also Read :புது அவதாரம் எடுத்து அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி.. தனுஷ், சிவகார்த்திகேயன் போல செய்யபோகும் வேலை

இந்நிலையில் பிரின்ஸ் பட தோல்வியால் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் கதையை சிவகார்த்திகேயன் மாற்ற சொன்னதால் இயக்குனர் முடியவே முடியாது என கூறியுள்ளாராம்.

ஆகையால் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் இடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. டாக்டர், டான் என வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் படம் பெரிய சருக்களை ஏற்படுத்தி உள்ளது.

Also Read :தோல்வி பயத்தில் சிவகார்த்திகேயன்.. பிரின்ஸ் படத்தால் முட்டிக்கொள்ளும் மாவீரன் டீம்

இந்த படத்தின் தோல்வியால் சிவகார்த்திகேயனின் அடுத்த அடுத்த படங்களும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து சிவகார்த்திகேயன் எப்படி மீள போகிறார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் படக்குழு தரப்பிலிருந்து இப்போது ஒரு அறிக்கை வந்துள்ளது.

அதாவது சென்னையில் கனமழை காரணமாக பிரின்ஸ் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற திங்கள் முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்துள்ளனர். ஆகையால் இணையத்தில் பரவி வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என படக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

Also Read :ஒரே சமயத்தில் என்ட்ரி.. அகலக்கால் வைத்த டைமிங் நடிகரை பின்னுக்கு தள்ளி டாப் கியரில் சிவகார்த்திகேயன்

Trending News