வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கர்வமே என் தலைக்கவசம், கமல்ஹாசன் உண்மையில் இப்படிப்பட்டவரா? அந்தணன் கூறும் ரகசியம்

வலைப்பேச்சு அந்தணன் – ’’ஒரு நடிகர் தன்னைப் பார்த்தாலே பல ஆண்டுகளுக்குப் புண்ணியம் கிடைத்த மாதிரி நினைத்துக் கொண்டிருக்கும் சிலரை தன்னுடன் வைத்துக் கொண்டு அவர்களிடம் வேலை வாங்குவது. ஆனால் அவர்களுக்கு மாதம் தோறும் சம்பளமே கொடுப்பதில்லை. சம்பளம் கேட்டால் நீ என் பக்கத்தில் இருப்பதே பாக்கியம் என்பது மாதிரி சொல்லிவிட்டு இப்போதுவரை சம்பளமே கொடுக்கவில்லை; வேலை மட்டும் வாங்குகிறார்.

கிளாமர் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்திற்கு உதவி

ஆனால், கமல்ஹாசனுக்கு கிளாமர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பி.ஆர்.ஓவாக வேலை செய்து வந்தார். பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆர் படங்களுக்கு எல்லாம் பி.ஆர்.ஓவாக பணியாற்றியவர். இப்போதுள்ளது போல் இணையதளம் அப்போது இல்லை. புகைப்படங்களை ஸ்டுடியோவுக்குச் சென்று எடுக்க வேண்டும். அதில், நிறைய படங்கள் எடுத்து தனிதனியாக சினிமா நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டும்.

இதை நடிகர்களின் சார்பில் பணியாற்றியவர். குறிப்பாக கமலுக்காக பி.ஆர்.ஓவாக பணியாற்றினார். ஒரு காலகட்டத்தில் இவருக்குப் பதிலாக இன்னொருவரை பி.ஆர். ஓவாக வைத்துக் கொண்டார் கமல். ஆனாலும், கிளாமர் கிருஷ்ணமூர்த்தியிடம், மாதம் மாதம் உங்கள் சம்பளம் தவறாமல் கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்து, அவர் மரணித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றுவரை அவரது ஊழியர்களுக்கு என்ன சம்பளமோ, போனஸோ அதையேதான் கிளாமர் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்திற்கு கவரில் அனுப்பி வைக்கிறார். அவரது உதவும் குணமும் மனமும் இதற்குச் சான்று என்று தெரிவித்துள்ளார்.

கர்வமே என் தலைக்கவசம்

மேலும், இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் இப்படி தன்னுடன் பணியாற்றியவருக்கு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து உதவி செய்யவில்லை. இதை கமல் செய்து வருகிறார். தான் கர்வம் உள்ளவர் என்று கூறுவதற்கும் கர்வமே என் தலைக்கவசம் என்று அவர் கூறியது அவருக்குத்தான் பொருத்தமாக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தன் ரசிகர் நற்பணி மன்றம் மூலமும் மக்கள் நீதி மய்யம் மூலமும் பல்வேறு உதவிகள் செய்து வந்தாலும், கமல் பற்றி இதுவரை வெளியாகாத செய்தியை அந்தணன் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் தான் இத்தனை உதவிகள் செய்துவருவதை கமல் மற்ற நடிகர்களைப் போல் இதுவரை வெளிச்சம் போட்டுக் காட்டியதில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Trending News