வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

என்னது.. புஷ்பா 2 பட நடிகை ஸ்ரீலீலா 2 குழந்தைகளுக்கு அம்மாவா? அந்த மனசு தான் சார் கடவுள்!

அல்லு அர்ஜூன்-ராஷ்மிகா மந்தனா நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் புஷ்பா தி ரூல். இந்த படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் பாசிட்டிவ் ரிவியூ கொடுத்து வருவதால், நிச்சயம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலிக்கும் என கூறப்படுகிறது.

புஷ்பா படத்துல ஓ சொல்ரியா மாமான்னு ஒரு ஹிட் பாட்டுக்கு டான்ஸ் ஆடினார். அது செம வைரல். புஷ்பா 2 படத்தில் அவருக்குப் பதிலாக ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.

அல்லு அர்ஜூனே டான்ஸில் கிங், அவருடன் போட்டி போட்டுக் கொண்டு KISSIK பாடலில் ஆடி, தானும் ஒரு டான்ஸ் குயின் என நிரூபித்துள்ளார் ஸ்ரீலீலா. இப்பாடல் வெளியாகி வைரலானது.

ரசிகர்களும் இருவரின் கெமிஸ்ட்ரி ஓகே, புஷ்பா 3 படத்திலும் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இந்த இளம் வயதில் இத்தனை இரக்க குணமா?

தெலுங்கில் டாப் ஹீரோயினாக வலம் வரும் ஸ்ரீலீலாவுக்கு 21 வயது. இவர் இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இரக்கம் மனம் கொண்ட அவர், பலருக்கு உதவிகளும் செய்து வருகிறார்.

இந்த இளம் வயதில் இப்படிப்பட்ட இளகிய மனமா? என அவரது உதவும் குணத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலிலேயே அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார் அவர்.

தென்னிந்திய டாப் ஹீரோக்கள் தங்கள் படங்களில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகிறது.

Trending News