Kavin: யாருடைய படம் வசூல் அளவில் லாபத்தை கொடுக்கிறதோ, அவர்களுக்கே மார்க்கெட்டில் நல்ல மதிப்பு கூடுகிறது. அந்த வகையில் கவின் நடித்த மூன்று படத்தின் மூலம் மக்களின் ஸ்டாராக பெயர் வாங்கி விட்டார். தொடர்ந்து வாய்ப்புகளும் இவரை தேடி வந்து கொண்டே இருக்கிறது. கவின் நடித்தாலே அந்த படம் ஹிட்டாகிவிடும் என்ற நிலைமையும் வந்துவிட்டது.
இதனால் கவின் தற்போது அவருடைய சம்பளத்தை அதிகமாக வேண்டும் என்று டிமாண்ட் பண்ணி இருக்கிறார். பொதுவாக விஜய், அஜித், ரஜினி மற்றும் கமல் போன்ற முன்னணி நடிகர்கள் ஒவ்வொரு படத்திற்கும் அவர்களுடைய சம்பளத்தை கூட்டிக் கொண்டே வருகிறார்கள். அதே மாதிரி கவினும் 2 கோடி சம்பளம் வேண்டும் என்று ஸ்டார் படத்தில் டிமாண்ட் பண்ணி கேட்டு வாங்கியதாக கூறப்படுகிறது.
சம்பளம் அதிகமாக கேட்டது ஒரு குத்தமா?
இதைப்பற்றி கவின் இடம் பத்திரிகையாளர்கள் கேட்ட பொழுது ஒவ்வொரு நடிகரின் மார்க்கெட் உயரும் பொழுது அவர்களுடைய சம்பளத்தை உயர்த்துவதில் எந்தவித தவறும் இல்லையே என்று கூறி இருக்கிறார். அத்துடன் இது ஒரு நடிகராக தயாரிப்பாளர்களுக்கு வைக்கும் கோரிக்கை. இதில் ஏற்ற இறக்கங்கள் என்னவென்று நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பேசி முடிவு பண்ண வேண்டிய ஒரு விஷயம் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் இவர் இப்படி அதிகமாக சம்பளத்தை கேட்டதற்கு தயாரிப்பாளர் கே ராஜன் ரொம்பவே கோபமாக பதில் அளித்திருக்கிறார். அதாவது எந்த ஒரு படமும் கவின் நடித்ததற்காக ஓடவில்லை. அந்தப் படத்தின் கதையை வெற்றிகரமாக கொடுத்த இயக்குனர் மற்றும் எவ்வளவு செலவு பண்ணினாலும் பரவாயில்லை என்று தயாரிப்பாளர்களும் துணிந்து எடுத்த ஒரு விஷயம் தான் கவினுக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது.
ஆனால் அது தெரியாமல் நடித்த இரண்டு படங்கள் ஹிட்டானதும் அதிகமான சம்பளத்தை கேட்பது ரொம்பவே மட்டமானது. கவின் கேட்டது ரொம்பவே கேவலமானது. அதனாலயே சீக்கிரமாக சரிந்து விடுவார் என்று சாபம் விடும் அளவிற்கு தயாரிப்பாளர் கே ராஜன் மொத்த வன்மத்தையும் காட்டி பேசி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் ஆரம்பத்தில் ஹீரோவாக ஆவதற்கு எந்த அளவிற்கு முயற்சி எடுத்து கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருப்பாய். அந்த நேரத்தில் உன்னை நம்பி ஒரு இயக்குனரும் தயாரிப்பாளரும் படத்தின் கதையை கொடுத்ததற்கு காட்டுற விசுவாசமா என்று கவினை தாக்கி ஆவேசமாக பேசியிருக்கிறார்.
இவர் ஒரு பக்கம் இந்த மாதிரி பேசி இருந்தாலும் கவினைப் பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் அவருடைய நடிப்புத் திறமையை அதிகரித்துக் கொண்டே தான் வருகிறார். திறமை இருந்தால் நிச்சயம் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்கு ஏற்ற மாதிரி அவருக்கு ஏற்ற சம்பளத்தை அவர் கேட்கிறார். கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் கையில் தான் இருக்கிறது.
இதுல எதுக்கு கே ராஜன் தலையிட்டு கவினை இந்த அளவுக்கு மட்டமாக பேச வேண்டும் என்று தெரியவில்லை. பெரிய பெரிய நடிகர்கள் அவர்களுக்கு ஏற்ற மாதிரி சம்பளத்தை கூட்டும் பொழுது கஷ்டப்பட்டு இளம் ஹீரோவாக நடித்துக் கொண்டு வரும் நடிகர்கள் சம்பளத்தை அதிகமாக கேட்க கூடாதா என்ற கேள்வி கே ராஜனுக்கு எதிராக திரும்பி வருகிறது.