திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

முகபாவனையே இல்லாத விஷால் பட நடிகை.. மார்க்கெட் சரிய இதுதான் காரணம்

Vishal Movie Actor Lost Market: சினிமாவில் ஹீரோக்களின் ஆதிக்கம் பல வருடம் இருந்தாலும் கதாநாயகிகள் குறிப்பிட்ட வருடங்கள் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். ஆனால் அதையும் மீறி நயன்தாரா, திரிஷா போன்ற நடிகைகள் மீண்டும் கம்பேக் கொடுத்து படங்களில் கலக்கி வருகிறார்கள். ஆனால் நல்ல திறமை இருந்தும் விஷால் பட நடிகை ஒருவர் மார்க்கெட்டை இழந்துள்ளார்.

இதற்கான காரணம் என்ன என்பதை பற்றி சினிமா விமர்சகர் மற்றும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். அதாவது நடிகர் விஷாலுக்கு இப்போது பட வாய்ப்புகள் குறைந்த வண்ணம் இருக்கிறது. தொடர் பட தோல்வி மற்றும் அவரது நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் தயாரிப்பாளர்கள் படம் கொடுக்க தயங்குகிறார்கள்.

Also Read : 20 வருடத்தில் விஷால் செய்யாத சாதனையை , 10 வருடங்களில் சிவகார்த்திகேயன் செய்த சம்பவம்.. விழுந்து விழுந்து நடிச்சும் பிரயோஜனம் இல்ல

இந்நிலையில் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான லத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சுனைனா. இவர் ஆரம்பத்தில் காதலில் விழுந்தேன் என்ற படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்பு பெரிய நடிகர்களின் பட வாய்ப்பு இவருக்கு வந்தது.

ஆனாலும் எந்த படமும் சரியாக போகவில்லை. இதற்கு காரணம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என எந்த ஒரு மொழிக்கான முகபாவனையும் சுனைனாவுக்கு இல்லாதது மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் என பயில்வான் கூறி இருக்கிறார். ஒரு அன்னியர் போன்ற தோற்றம் கொண்டதால் அவருக்கு பட வாய்ப்புகள் பெரிய அளவில் வரவில்லை.

Also Read : லத்தி படம் மொக்கையானது கூட தெரியாத விஷால்.. துண்ட காணும் துணிய காணோம் என ஓடும் இயக்குனர்கள்

மேலும் நடிகைகள் தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் நல்ல கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். ஆனால் சுனைனாவுக்கு அதுபோன்ற வாய்ப்புகளை இயக்குனர்கள் கொடுக்கவில்லை. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டார்.

அதுமட்டுமின்றி தொடர்ந்து பட வாய்ப்புகள் அவருக்கு இல்லாமல் போய்விட்டது. இப்போது ஏதாவது ஒரு சில படத்தில் நடித்த காலத்தை ஓட்டி வருகிறார். திறமை இருந்தும் சரியான முகபாவனை இல்லாத காரணத்தினால் சுனைனாவின் சினிமா கேரியர் கேள்விக்குறியாக மாறி உள்ளது என பயில்வான் கூறி இருக்கிறார்.

Also Read : படக்குழுவுக்கு தங்க காசு கொடுத்த விஷால் பட நடிகை.. அவரோட மார்க்கெட் தான் அதல பாதாளத்தில் கிடக்கு

Trending News