திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மாந்திரீகத்தால் முடக்கப்பட்ட விஜயகாந்த்.. பரபரப்பான தகவலை கூறிய பிரபலம்

Vijayakanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 72 வயது உள்ள நிலையில் இப்போதும் கதாநாயகனாக நடித்து வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் ரஜினியை விட ஒரு வயது இளையவர் தான் விஜயகாந்த். இன்று அவருடைய 71வது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் வாழ்த்து கூறினாலும் ஒருபுறம் வேதனையுடன் தான் இருக்கிறார்கள்.

ஏனென்றால் தமிழ் சினிமாவின் வள்ளலாக பார்க்கப்பட்ட விஜயகாந்த் இப்போது உடல்நிலை மோசமாக இருப்பது அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலும் சமீபத்தில் அவரது மகன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேப்டனின் உடல்நிலை சற்று பின்னடைவாக இருப்பதாக கூறியிருந்தார்.

Also Read : அஜித்தை ஒருமையில் கண்டபடி திட்டிய விஜயகாந்த்.. எதற்கும் அசராதவனாக இருந்து வென்று காட்டிய ஏகே.!

உதவி என்று கேட்போருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்த விஜயகாந்துக்கு இந்த நிலைமை ஏற்பட என்ன காரணம் என்பதை அவருடைய நெருங்கி பழகிய மீசை ராஜேந்திரன் கூறியிருக்கிறார். விஜயகாந்தை பற்றி யாருக்கும் தெரியாத நிறைய விஷயங்களை இவர் தொடர்ந்து யூடியூப் வாயிலாக பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சட்டசபையில் ஜெயலலிதா நேருக்கு நேர் பார்த்த ஒரே ஆண்மகன் யார் என்றால் விஜயகாந்த் தான். அதுவரை ஜெயலலிதாவிடம் பேச பலர் தயங்கிக் கொண்டிருந்த நிலையில் விஜயகாந்த் நாக்கை மடக்கி பேசிய தோரணை அவருக்கே அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று மீசை ராஜேந்திரன் கூறினார்.

Also Read : ஜவானால் மீண்டும் அசிங்கப்பட போகும் அட்லி.. விஜயகாந்த் படத்தை காப்பி அடித்ததால் வந்த விளைவு

மேலும் இந்த நிகழ்வு நடந்த சில நாட்களிலேயே விஜயகாந்தின் வீட்டின் முன் பூஜை நடந்ததற்கான சில விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அரசியல் கட்சியில் உள்ளவர்கள் பூஜை மீது அதிகம் ஆர்வம் உள்ளவர்கள் என்று தெரியும். ஆனால் அவர்கள் தான் இதை செய்தார்களா என்றதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அதோடு மட்டுமல்லாமல் விஜயகாந்த் அரசியலில் மிகுந்த நம்பிக்கை உடன் வந்திருந்தார். அதில் நம்பிக்கை துரோகம் மற்றும் ஏமாற்றங்கள் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது எல்லாம் சேர்ந்து தான் விஜயகாந்தின் உடல்நிலை இந்த நிலைமைக்கு ஆக காரணம் என்று மீசை ராஜேந்திரன் வேதனையுடன் பகிர்ந்து இருக்கிறார்.

Also Read : லோகேஷை பின்னுக்கு தள்ள ஷங்கர் எடுக்கப் போகும் ஆயுதம்.. ரஜினி, கமல் கூட்டணியில் புது முயற்சி

Trending News