திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

90-ஸ் கிட்ஸ் ஃபேவரெட்டான ’மர்மதேசம்’ டைட்டில் வைக்கக் காரணம் இதுதானா? இயக்குனர் சுவாரஸ்ய தகவல்

மர்மதேசம் என்ற தொடரின் டைட்டில் எப்படி உருவானது என்பது பற்றி அத்தொடரின் இயக்குனர் சுவாரஸ்யமான தகவலை பகிரிந்திருக்கிறார்.

மர்மதேசம்

90 களில் ஒளிபரப்பான எல்லோருக்கும் பிடித்தமான திரில் தொடர் என்றால் அது மர்மதேசம். 90ஸ் கிட்களில் ஃபேவரெட் தொடரான இத்தொடரின் பெயரைக் கேட்டாலே எல்லோருக்கும் பழைய நினவுகள் மனதில் ரீங்காரமிடும். அந்தளவு இத்தொடரும், இதன் கதையும், இதன் காட்சிகளும் பரீட்சயமானது. இத்தொடரை நாகா மற்றும் சி.ஜே.பாஸ்கர் இயக்கியிருந்தனர்.

இந்த தொடருக்கு பிரபல எழுத்தாளர் இந்தியா செளந்திரராஜன் கதை எழுதியிருந்தார். இத்தொடர் தமிழ் தொலைக்காட்சிகளில் 1995 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டுவரை சன் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பானது. இத்தொடர் அத்தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நேரத்தில் சிறுவர்கள் கண் அசைக்காமல் திகிலுடன் தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

சில ஆண்டுகளுக்கு பின் அதாவது 1998 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டுவரை இத்தொடர் ராஜ் தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. இதையடுத்து, கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து வசந்த் தொலைக்காட்சியில் மர்மதேசம் தொடர் ஒளிபரப்பானது.

இத்தொடருக்கான கிராக்கி அதிகரிப்பதை உணர்ந்த தொலைக்காட்சி இதை வாங்க போட்டி போட்டன. அதன்படி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜீலை 27 ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பானது. 2019 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை கவிதாலயா யூடியூப்பில் ஒளிப்பரப்பத் தொடங்கியது. அதேபோல், மர்மதேச தொடர் ரகசியம் இந்தியில் ஸ்டார் பாரத் தொலைக்காட்சியில் கால பைரவ் ரகசியம் என்ற பெயரில் கதையில் சில மாற்றங்களுடன் ஒளிபரப்பாகி வெற்றி பெற்றது.

இத்தொடருக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகும் வரவேற்பு கிடைத்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இயக்குனர் நாகா ஜீ தமிழ் ஓடிடி தளத்திற்காக மர்மதேசம் சீரியலை, ஐந்தாம் வேதம் வெப் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். மேலும், மர்மம், புராணங்கள், அறிவியல் என ஐந்தாம் வேதத்தை தேடுகின்ற கதையாக வெப் சீரிசாக வெளியாகியுள்ளது. இத்தொடர் பற்றி நாகா சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது மர்மதேசம் டைட்டில் உருவானது பற்றி சுவாரஸ்ய தகவல் தெரிவித்துள்ளார்.

மர்மதேசம் டைட்டில் உருவானது எப்படி?

இதுகுறித்து அவர் கூறியதாவது: ’’ பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவபெருமான் கொய்ததாக கதையிருக்கிறது. அப்படி, ஐந்தாம் வேதம் என ஒன்று இருந்தால் என்னவாகும் என்பதை யோசித்து உருவாக்கினேன். இதை திரைக்கதையாக எழுத எனக்கு 3 ஆண்டுகள் ஆனது. மர்மதேசம் தலைப்பு வைப்பதற்கு முன் சுமார் 25 ஆண்டுகளுக்கு அனுப்பினேன் இயக்குனர் பாலச்சந்தருக்கு. அவருக்கு தலைப்பு திருப்தியாகவில்லை. அப்போது ஷூட்டிங் பிரம்மதேசம் என்ற ஊரில் நடந்து வந்ததால் இதற்கு மர்மதேசம் என்று பெயர் வைத்துக் கூறினேன். அது அவருக்குப் பிடிக்கவே, அதுவே ஓகேவானது. இப்போது என்னை மர்மதேசம் இயக்குனர் என்றால்தான் தெரிகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_img

Trending News