வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அவசரத்துக்கு உதவாமல் கட்சி நடத்தி என்ன பிரயோஜனம்.. கமல் செய்யாததை செய்துக்காட்டிய கேப்டன்

உலகநாயகன் கமலஹாசன் பொதுவாகவே சினிமாவில் தான் சம்பாரிக்கும் பணத்தை வைத்து அப்படியே சினிமாவுக்கே செலவு செய்து வருபவர். மற்ற நடிகர்களை போல் நடிப்பதை தாண்டி வேறு தொழில்களில் ஈடுபட்டு பெரிதாக இவர் பணம் ஈட்டியது கிடையாது. இவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படத்தில் புதுமையை காண்பிக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்பவர்.

ஆனால் சினிமாவில் உள்ள பிரபலங்களுக்கு ஏதேனும் உதவி என்றால் கமல் சற்று பின்தங்கியே நிற்பார். அதிலும் முக்கியமாக பண உதவி என்றால் அதிகம் யோசித்து தான் செய்வார். இப்படி சினிமாவில் இருக்கும் பிரபலங்களுக்கே எதையும் கொடுக்க மனமில்லாத கமல், எப்படி சாதாரண மக்களுக்கு உதவுவார் என்ற கேள்விக்கு ஏற்ப 20 வருடங்கள் முன்பு ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

Also Read: கமலஹாசன் வாரிசு அடுத்து நாங்கள் தான் என போட்டி போடும் 4 நடிகர்கள்.. உலக நாயகன் கொடுத்த சர்டிபிகேட்

கடந்த 2004 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய ஒரு நிகழ்வு தான் கும்பகோணத்தில் நடைபெற்ற தீ விபத்து சம்பவம். ஸ்ரீ கிருஷ்ணா தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட 94 பள்ளி குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து 20 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், ஒவ்வொரு வருடமும் ஜூலை 16 ஆம் தேதி வந்தால் நம் அனைவரது கண்களிலும் கண்ணீர் தேங்கி நிற்கும் வகையிலேயே இச்சம்பவம் நம் ஆழ்மனதில் பதிந்துள்ளது.

இதனிடையே இந்த தீ விபத்து நடந்த சமயத்தில், பள்ளிகளில் இனி கூரைகள் இருக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டது. மேலும் குழந்தைகளை இழந்து வாடிய அத்தனை குடும்பத்துக்கும் தலா 10 லட்சம் ரூபாய் தமிழக அரசால் பொது நிதியிலிருந்து வழங்கப்பட்டது. இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் முதலைமைச்சரின் பொது நிதிக்கு தங்களால் முடிந்த பணத்தை வாரி இறைத்தனர்.

Also Read: ஓடுற குதிரைகளை வளைத்து போடும் கமலஹாசன்.. வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரைகள்

ஆனால் இப்படி பல பிரபலங்கள் பணம் கொடுப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டது கேப்டன் விஜயகாந்த் தான். இவரது தாராள மனசு பலரும் அறிந்த நிலையில், சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை பல பேருக்கு உதவிகளை செய்தவர். அந்த வகையில் சம்பவம் நடந்த அன்று ஏவிஎம் ஸ்டுடியோவில் ஷூட்டிங்கில் இருந்த விஜயகாந்துடன், நடிகர் சத்யராஜூம் கும்பகோணம் தீ விபத்து குறித்து இரவு 7 மணி வரை வருத்தத்துடன் கலந்துரையாடியுள்ளனர்.

மறுநாள் தொலைக்காட்சியில் விஜயகாந்த் 10 லட்ச ரூபாய் உதவிய செய்தி சத்யராஜுக்கு தெரியவர அவரும் கும்பகோணத்திற்கு சென்று உதவியுள்ளார். இவரை தொடர்ந்து மற்ற நடிகர்களும் உதவியுள்ளனர். ஆனால் கமல் மட்டும் உதவுகிறேன் என சொல்லிவிட்டு தற்போது வரை 10 பைசா கூட உதவாமல் உள்ளார். இப்படி பிஞ்சுக்குழந்தைகளுக்கு கூட உதவாத கமல், கட்சி நடத்தி என்ன பிரயோஜனம் என தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

Also Read: பையனை தூக்கி விட வெளியே வரும் விஜயகாந்த்.. தேர்தலுக்கான யுத்தியா என பரபரப்பு

Trending News