Jaisankar Friendship: உண்மையான நட்புக்கு ஈடாக எந்த ஒரு விஷயமும் பெருசாக தெரிவதில்லை. எத்தனையோ சொந்த பந்தங்கள் இருந்தாலும் உண்மையான நண்பர் ஒருவர் கிடைத்துவிட்டால் அவர்களுடைய வாழ்க்கையை சொர்க்கமாக இருக்கும். அப்படித்தான் ஜெய்சங்கரும் நட்பின் இலக்கணமாக வாழ்ந்து காட்டி இருக்கிறார். அதாவது எம்ஜிஆர் சிவாஜி போன்ற பல ஹீரோக்கள் இருந்தாலும் அவர்களுடன் சண்டை போட்டு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த பல நடிகர்களும் நல்ல பெயர் வாங்கி பிரபலமாக இருக்கிறார்கள்.
அதில் அந்த காலத்தில் நம்பியார் தான் அதிக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து ஒரு வில்லன் ரேஞ்சுக்கு அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். இவருக்கு அடுத்தபடியாக நடிகர் அசோகன் அவர்களையும் சொல்லலாம். இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். ஆனால் முக்கால்வாசி நடித்த படங்கள் அனைத்தும் எதிர்மறையான கேரக்டர்தான். அந்த வகையில் நடிகர் அசோகனும் ஜெய்சங்கரும் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார்கள்.
அதனாலேயே இவர்களுடைய நட்பு ரொம்பவே வலுவாக அமைந்து பெஸ்ட் பிரெண்ட்ஸ் என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கி இருக்கிறார்கள். அடுத்து கொஞ்சம் வருடங்களுக்கு பின் திடீரென்று அசோகன் அவருடைய 51 வது வயது உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார். அந்த சமயத்தில் ஒரு நண்பனாக அவர் பக்கத்தில் இருந்து கடைசி சம்பிரதாயம் முடிய வரை கூடவே இருந்து குடும்பத்திற்கு பக்கபலமாக ஜெய்சங்கர் இருந்திருக்கிறார்.
Also read: எம்ஜிஆர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. காலில் விழுந்து கதறிய அசோகன்
அதிலும் அசோகன், கிறிஸ்டின் என்பதால் அவருடைய உடம்பை சவப்பெட்டியில் வைத்திருந்தனர். அதில் அசோகனை பார்த்ததும் ஜெய்சங்கர் துடிதுடித்து போயி அழுது கொண்டே இருந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அப்பொழுது அசோகன் முகம் தாடி மீசையுடன் வாடி போய் இருந்ததை பார்த்ததும் ஜெய்சங்கர் பார்பர் ஷாப்பில் இருந்து ஆட்களை வரவைத்து அசோகனுக்கு கிளீன் சேவ் பண்ணி விட சொல்லி இருக்கிறார்.
ஏனென்றால் இந்த மாதிரி ஒரு நிலைமையில் என்னுடைய நண்பரை என்னால் பார்க்க முடியாது. அவர் எப்பொழுதுமே அழகாகவும் கம்பீரமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரி ஒரு காரியத்தை செய்ய வைத்திருக்கிறார். இவருடைய செயல்கள் அங்கு இருப்பவர்களே வாயடைக்க வைத்திருக்கிறது. அதன்பின் நண்பனின் அழகிய முகத்தை பார்த்து அழுது கொண்டு மண்ணில் புதைக்கும் வரை கூடவே இருந்து கண்ணீருடன் வீடு திரும்பி இருக்கிறார்.