சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

இது என்ன அரசியல் கட்சியா.? இளையராஜாவிற்காக கடுப்பில் கொந்தளித்து பேசிய கங்கை அமரன்

Gangai Amaran: ஒவ்வொரு துறையிலும் அதற்கான தலைவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை நியமிப்பது வழக்கம் தான். அந்த வகையில் சினிமாவில் நடிகர் சங்கத் தலைவர், தயாரிப்பாளர் சங்க தலைவர் போன்ற பதிவுகளை கொடுத்து ஒவ்வொருவருக்கும் பொறுப்புகளையும் கொடுத்திருக்கிறார்கள். அதே மாதிரி இசைக்கலைஞர்கள் மொத்தமாக ஓட்டு போட்டு திரைப்பட இசைக்கலைஞர் சங்கத்தில் யாரையாவது ஒருத்தரை வெற்றி பெற வைப்பார்கள்.

அப்படி சமீப காலமாக இசைக்கலைஞர்கள் சார்பில் தலைவராக இசையமைப்பாளர் தீனா பதவியில் இருக்கிறார். மேலும் இதை ஆரம்பிப்பதற்கு முன் இவர்களுடைய ரூல்ஸ் படி ஒருவருக்கு இரண்டு வருட பதவி மட்டுமே நீடித்துக் கொள்ள வேண்டும் என்றுதான். ஆனால் இசையமைப்பாளர் தீனா அதை கொஞ்சம் கூட காதில் வாங்காமல் தொடர்ந்து நான்கு வருடமாக பதவியில் இருந்து வருகிறார்.

அத்துடன் இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் என்று ஆசையில் சுற்றி வருகிறார். ஏற்கனவே இவர் பதவியில் இருந்த பொழுது கொரோனா காலத்தில் பல மோசடிகளை செய்து, போர்ஜரி பண்ணி கையெழுத்துக்களை போட்டு கிட்டத்தட்ட 80 லட்சம் அளவிற்கு பணத்தை சுருட்டி இருக்கிறார். இப்பொழுது வேறு ஒருவர் தலைவராக வந்துவிட்டால் இவருடைய லட்சணம் எல்லாம் தெரிந்து விடும் என்பதற்காக தொடர்ந்து போட்டியில் நிற்க வேண்டும் என்ற ஆசைப்படுகிறார்.

Also read: முரட்டு நாயகனை புறக்கணித்த இளையராஜா.. படத்தைப் பார்த்து வாயடைத்துப் போன இசைஞானி

இது என்ன அரசியல் கட்சியா? தொடர்ந்து ஒரு ஆளே ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் சரியாகும் என்று இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர், தயாரிப்பாளராக இருக்கும் கங்கை அமரன், தீனாவைப் பற்றி கொந்தளித்து பேசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இசைக்கலைஞர்களுக்கு மிகப்பெரிய ஜாம்பவானாக இருந்து அனைத்தையும் கற்றுக் கொடுத்தது இளையராஜா தான்.

அப்படி இருக்கும் பொழுது அவர் சொல்லுக்கும் மதிப்பில்லாமல் தீனா நடந்து கொள்வது எங்களால் ஏற்க முடியவில்லை. சமீபத்தில் எங்கள் வீட்டில் துக்க நிகழ்ச்சி ஏற்பட்டதால் அவரால் இதில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் இளையராஜாவின் சார்பாக நான் பேசுகிறேன் என்று கங்கை அமரன் இன்று நடக்க இருக்கும் இசை கலைஞர்கள் தேர்தலில் பேசி இருக்கிறார்.

Also read: இளையராஜா ரகுமான் ஜேசுதாஸ் மூவரும் இணைந்த ஒரே பாடல்.. இந்த பாடலுடன் வாழ்க்கையை முடித்துக் கொண்ட நடிகை

Trending News