புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Rashmika Mandanna: ஐடி ரெய்டிலிருந்து தப்பிக்க தர மட்டத்திற்கு இறங்கிய ராஷ்மிகா.? வெட்டி விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை

நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ராஷ்மிகா செய்த வேலைதான் இப்போது மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடைசியாக பாலிவுட்டில் அவர் நடித்த அனிமல் படம் மிகவும் மோசமான விமர்சனத்தை சந்தித்தது.

இந்நிலையில் தமிழில் சுல்தான், வாரிசு போன்ற படங்களில் நடித்த ராஷ்மிகா தமிழைக் காட்டிலும் மற்ற மொழிகளில் தான் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக பாலிவுட்டில் இவருக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் தொடர்ந்து அங்கு அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ராஷ்மிகா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 25 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் அதோடு 3.94 கோடி மதிப்பில் அறிவிக்கப்படாத சொத்துக்களை ஐடி அதிகாரிகள் கைப்பற்றினர்.

ஐடி ரெய்டிலிருந்து தப்பிக்க ராஷ்மிகா செய்த விஷயம்

மேலும் 1.5 கோடி ராஷ்மிகா வருமான வரி செலுத்தவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் அடல் சேது பாலாத்தில் பயணம் செய்த ராஷ்மிகா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ராஷ்மிகா கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

மேலும் இந்த பயணம் தனக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் இதை கடக்க எப்படியும் ரெண்டு மணி நேரம் ஆகும் நிலையில் 20 நிமிடங்களில் முடிந்திருக்கிறது. மோடியின் ஆட்சியால் இந்தியா வளர்ச்சி அடைந்திருக்கிறது என ரஷ்மிகா கூறியிருந்தார்.

அதாவது ஐடி ரெய்டில் ராஷ்மிகா சிக்கிய நிலையில் அதிலிருந்து தப்பிக்க தான் இப்போது மோடிக்கு புகழாரம் செய்கிறார் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். ராஷ்மிகாவின் இந்த வெட்டி விளம்பரத்தால் இப்போது அவரது பெயர் டேமேஜ் ஆகி இருக்கிறது.

Trending News