ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஏர்போர்ட்டில் வசமாக சிக்கிய தமன்னா ஜோடி.. ஜாலி மூடில் காதலுடன் ஊர் சுற்றும் காவாலி

Tamannaah: தமன்னா இப்போது தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறார். தமிழில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னா ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை இழந்து விட்டார். இதனால் பாலிவுட் பக்கம் பறந்து அங்கு ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தமன்னா என்ட்ரி கொடுத்திருந்தார்.

அந்த படத்தில் இடம்பெற்ற காவாலையா பாடலுக்கு இவர் போட்ட குத்தாட்டம் பட்டி தொட்டி எங்கும் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் 33 வயதாகும் தமன்னா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அவர் பல காதல் சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் இப்போது ஏர்போட்டில் வசமாக சிக்கி உள்ளார்.

Also Read : பல கோடியில் புரளும் தமன்னா.. 33 வயதில் மில்க் பியூட்டியின் மொத்த சொத்து மதிப்பு

அதாவது தமன்னா லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்ற தொடர் ஒன்றில் நடித்திருந்தார். இதில் அவர் காட்டிய தாராள கவர்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இத்தொடரில் தமன்னாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார் விஜய் வர்மா. இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக இணையத்தில் காட்டு தீயாய் செய்தி பரவியது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக தமன்னாவே ஒரு பேட்டியில் விஜய் உடன் பழகும் போது மிகவும் நம்பிக்கை உடையவராக இருக்கிறார் என்று கூறினார். மேலும் இது தங்களுக்குள் முதல் படம் என்றாலும் இதிலேயே காதல் மலர்ந்துள்ளதாக கூறியது பரபரப்பை கிளப்பியது.

Also Read : அவங்க 2 ஹீரோக்கள் இல்லன்னா நான் ஜீரோ தான்.. தமன்னா சர்வதேச அளவில் ட்ரெண்டாக காரணம் இதுதான்

விஜய் வர்மாவும் தமன்னா மீது உள்ள காதலை பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்போது படப்பிடிப்புக்கு இடையே உள்ள விடுமுறை காரணமாக தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் தனித்தனியாக வெளிநாடு புறப்பட்டு உள்ள வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆனால் ஆகஸ்ட் 26 ஆம் தேதியான இன்று விமான நிலையத்தில் இருந்து தான் புறப்பட்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு இவர்கள் இருவரும் தனித்தனியாக சென்றாலும் ஒன்றாகத்தான் விடுமுறையை வெளிநாட்டில் செலவிடப் போகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிவதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவால் ஜாலி மூடில் தமன்னா கையும் களவுமாக சிக்கி இருக்கிறார்.

ஏர்போர்ட்டில் வசமாக சிக்கிய தமன்னா ஜோடி

tamannah
tamannah

Also Read : ஜிவி பிரகாஷை வச்சு நசுக்கிய ஜெயிலர்.. அடியே படத்திற்கு போட்ட காசை எடுக்க முடியாமல் திணறும் முதல் நாள் கலெக்ஷன்

Trending News