திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் பட நடிகை பாத்ரூமில் செய்யும் மட்டமான வேலை.. அவரே சொன்ன அருவருப்பான விஷயம்

விஜய் படத்தில் நடித்தால் போதும் என பல நடிகைகள் உள்ளனர். அப்படிதான் ராஷ்மிகா தனது வாழ்நாள் கனவாக விஜய்யுடன் நடிக்க வேண்டும் என எண்ணி இருந்தார். வாரிசு படத்தில் அது நிறைவேறியது. விஜய்யே கொஞ்சமும் எதிர்பார்க்காமல் அவர் படத்தில் நடித்த ஒரு நடிகை இருக்கிறார்.

அந்த நடிகை தமிழில் ஒரே ஒரு படத்தில் தான் நடித்திருந்தார். அதுவும் விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். அதன் பிறகு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்க அங்கு சென்றுவிட்டார். சமீபத்தில் அவர் சொன்ன ஒரு விஷயம் தான் ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது.

Also Read : மெர்சலை மிஞ்சிய காப்பியா இருக்குதே.. விஜய் ஆண்டனி படத்திற்கு வந்த பெரிய சோதனை 

அதாவது விஜய்யின் தமிழன் படத்தில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. உலக அழகியான இவர் இந்த படத்தில் நடித்ததால் இதை வைத்தே படக்குழு ப்ரோமோஷன் செய்தது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் பிரியங்கா சோப்ராவுக்கு பாலிவுட்டில் பட வாய்ப்பு கிடைத்தது.

இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக பிரியங்கா சோப்ரா வளம் வந்தார். அதன் பிறகு அங்கிருந்து ஹாலிவுட் பட வாய்ப்பு கிடைத்தது. சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் சிட்டால் வெப் தொடரில் பிரியங்கா சோப்ராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Also Read : 22 வருடத்திற்கு முன்பே நடிப்பை தூக்கி எறிய முடிவெடுத்த தளபதி .. கோலிசோடா விஜய் மில்டன் கூறிய சுவாரஸ்யமான சம்பவம்

பிரபல ஊடகம் ஒன்றிற்கு பிரியங்கா சோப்ரா பேட்டி அளித்துள்ளார். அவருடைய கல்லூரி காலத்தில் அமெரிக்கா சென்றிருந்தாராம். அப்போது மிகுந்த பயந்த சுபாவம் கொண்டவராக இருந்துள்ளார். இதனால் யாரிடமும் அதிகம் பேசவும் மாட்டாராம். மேலும் யாரும் பார்க்காதபடி உணவு தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு பாத்ரூமில் சாப்பிடுவாராம்.

அதன் பிறகு கிளாஸ் ரூமுக்கு வந்து அமர்ந்து கொள்வாராம். இவ்வாறு நாட்கள் செல்ல சில நாட்களுக்குப் பின்பு எல்லோரையும் உற்று கவனிக்க ஆரம்பித்தாராம். அதன் பின்பு அவர்களை நண்பர்கள் ஆக்கிக் கொண்டு தன்னுடைய பயத்தை ஒதுக்கினாராம். ஆகையால் இப்போது இவ்வளவு பெரிய நடிகையாக பிரியங்கா சோப்ராவால் ஜொலிக்க முடிகிறது.

Also Read : விஜய் சேதுபதி இல்லாத சூது கவ்வும் 2.. 10 வருடங்களுக்குப் பிறகு வேகம் எடுக்கும் படப்பிடிப்பு

Trending News