திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜயகாந்தின் உடல் நிலைக்கு என்ன ஆச்சு.? அதிர்ச்சியை கிளப்பிய விஜய பிரபாகரன்

Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது தான் அவருடைய அடையாளம். தன்னை தேடி வருபவர்களுக்கு தன்னால் என்ன முடியுமோ அந்த உதவியை கண்டிப்பாக செய்யக்கூடியவர். சினிமாவில் பல பேருக்கு விஜயகாந்த் வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறார்.

அதுவும் கேப்டன் கைவசம் நடிகர் சங்கம் இருந்தபோது மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் படப்பிடிப்பில் உள்ளவர்கள் என்ன சாப்பாடு சாப்பிடுகிறார்களோ அதையே தான் விஜயகாந்த்தும் சாப்பிடுவாராம். மேலும் சினிமாவில் சாதித்த விஜயகாந்த் அரசியலிலும் கால் பதித்தார். இந்நிலையில் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இப்போது அவரது நிலைமையை பார்த்து பலரது கண்ணில் கண்ணீர் வருகிறது.

Also Read : ஜவானால் மீண்டும் அசிங்கப்பட போகும் அட்லி.. விஜயகாந்த் படத்தை காப்பி அடித்ததால் வந்த விளைவு

மிகவும் மெலிந்த தோற்றத்துடன் பேச முடியாமல் அவரைப் பார்க்கவே மிகவும் கொடுமையாக இருக்கிறது. அவ்வப்போது அவரது பிறந்த நாள் மற்றும் விசேஷங்களில் மட்டும் விஜயகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அதை பார்த்து ரசிகர்கள் ஆறுதல் கொண்டு இருந்தனர்.

இந்த சூழலில் அவரது மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். கேப்டனின் உடல்நிலை இப்போது சற்று பின்னடைவாக தான் இருக்கிறது என்று அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார். மேலும் பழையபடி அவர் நடப்பாரா, பேசுவாரா என்ற எண்ணம் தான் எங்களுக்குள் ஓடுகிறது.

Also Read : அஜித்தை ஒருமையில் கண்டபடி திட்டிய விஜயகாந்த்.. எதற்கும் அசராதவனாக இருந்து வென்று காட்டிய ஏகே.!

நாங்களும் அதற்கான முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். விரைவில் கேப்டன் குணம் பெறுவார் என நம்புவதாக விஜய பிரபாகரன் கூறியிருக்கிறார். இதை அறிந்த ரசிகர்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். கேப்டனை மீண்டும் பழையபடி பார்த்து விடுவோம் என்று நம்பிக்கையில் இருந்த ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

மேலும் தேமுதிக தொடர்ந்து அரசியலில் களம் காண உள்ளதாக விஜய பிரபாகரன் கூறியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் சில அரசியல் நிலவரங்களையும் அந்த பேட்டியில் கூறியிருந்தார். தன்னுடைய கனவு, ஆசை எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கேப்டனின் தாரக மந்திரமான, முடியாது என்பது முட்டாளுக்கு தான், ஆகையால் நாங்கள் சாதித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக போராடி வருவதாக கூறியிருக்கிறார்.

Also Read : பையனை தூக்கி விட வெளியே வரும் விஜயகாந்த்.. தேர்தலுக்கான யுத்தியா என பரபரப்பு

Trending News