செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

20 வருடத்தில் விஷால் செய்யாத சாதனையை , 10 வருடங்களில் சிவகார்த்திகேயன் செய்த சம்பவம்.. விழுந்து விழுந்து நடிச்சும் பிரயோஜனம் இல்ல

2004 ஆம் ஆண்டு இயக்குனர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான செல்லமே படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிகர் விஷால் அறிமுகமானார். இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து நானும் மதுரகாரன் தாடா என பல வசனங்களை பேசி ரசிகர்களை கவர்ந்தார்.

ஆனால் யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளி கொட்டிப்பதுபோல் அரசியலில் நுழையப்போகிறேன் என கூறி பல சர்ச்சைகளை உண்டாக்கினார். இதுபோதாது என நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பின்பு தான் திருமணம் என்ற கதையெல்லாம் கட்டி, தற்போதுவரை கட்டிடமும் கட்டாமல் , தாலியும் காட்டாமல் அல்லல்பட்டு வருகிறார்.

Also Read: லத்தி படம் மொக்கையானது கூட தெரியாத விஷால்.. துண்ட காணும் துணிய காணோம் என ஓடும் இயக்குனர்கள்

இருந்தாலும் வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடித்து நான் இன்னும் சினிமாவில் இருக்கிறேன் என்பதை நிரூபித்து வருகிறார். இதனிடையே 20 வருடங்களாக விஷால் முட்டி மோதி செய்யாத விஷயத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் 10 வருடத்தில் செய்துள்ளார். 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன், தொடர்ந்து எதிர்நீச்சல், மான் கராத்தே, உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார்.

நடிப்பது மட்டுமில்லாமல், பாடல்களை பாடுவது, பாடல் வரிகளை எழுதுவது, படங்களை தயாரிப்பது என சினிமாவுக்கு வந்த 10 ஆண்டுகளில் இவரது வளர்ச்சி அபரிபிதமானது. தற்போது கடனில் தத்தளித்தாலும் இவரது படங்களான மாவீரன், அயலான் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இதனிடையே 2021 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வரை வசூலானது.

Also Read: படக்குழுவுக்கு தங்க காசு கொடுத்த விஷால் பட நடிகை.. அவரோட மார்க்கெட் தான் அதல பாதாளத்தில் கிடக்கு

தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு வெளியான டான் படமும் 100 கோடி வரை வசூலை அள்ளி பாக்ஸ் ஆபிசில் இடம்பெற்றது. இப்படி நடிக்க வந்த 10 ஆண்டுகளில் 100 கோடி கிளப்பில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள நிலையில், 20 வருடங்களாக பல படங்களில் நடித்தும், தான் நடிக்கும் படங்களின் மூலமாக 100 கோடி வசூலை எடுத்து 100 கோடி கிளப்பில் விஷால் தற்போது வரை இணையாமல் உள்ளார்.

இதுவரை நடிகர் விஷால் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும், அவரால் இந்த ஒரு விஷயத்தில் சிவகார்த்திகேயனின் இடத்தை இதுவரை பிடிக்காமல் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு மேல் விஷால் 100 கோடி கிளப்பில் இணைவது சாத்தியமா என்ற கேள்விகள் இருந்தாலும், இதற்கெல்லாம் காரணமாக இருப்பது விஷாலின் தவறான கதை தேர்வு, கொடுத்த கால்ஷீட்டுக்கு ஏற்றார் போல் ஷூட்டிங்கிற்கு போகாமல் இருப்பது போன்ற சர்ச்சைகளும் முதன்மை காரணமாக பார்க்கப்படுகிறது.

Also Read: சிவகார்த்திகேயன் படத்திற்கு மட்டும் விதிவிலக்கா?. விஜய் படத்திற்கு எழுந்த பிரச்சனை

Trending News