திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எது பேசினாலும் சர்ச்சையாகிறது.. நான் நிறைய சாதிக்கணும், வாரிசு படத்தால் நொந்து போன பிரபலம்

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்திலிருந்து அடுத்தடுத்து வெளியான போஸ்டர்கள், முதல் மற்றும் இரண்டாம் பாடல்கள் என அனைத்தும் வைரலான நிலையில் தற்போது வெளியாகி உள்ள மூன்றாம் பாடலும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

இப்படி இந்த படத்திற்கு ஒரு புறம் எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு இருந்தாலும் மற்றொருபுறம் சில பல சர்ச்சைகளும் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது வாரிசு திரைப்படம் வெளியாகும் அதே நாளில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

Also read: விஜய்யின் சோலியை முடிக்க திட்டம் தீட்டிய விஷால்.. வலையில் சிக்குவாரா தளபதி

தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களைக் கொண்ட இந்த இரு நடிகர்களின் படங்களும் ஒரே நேரத்தில் மோத இருப்பது ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால் துணிவு திரைப்படத்தை காட்டிலும் வாரிசு திரைப்படத்திற்கு மிக குறைவான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.

அதனால் தயாரிப்பாளரான தில்ராஜு உதயநிதியை சந்தித்து இது குறித்து பேச போவதாகவும் தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய்க்கு தான் அதிக மாஸ் இருக்கிறது என்றும் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனால் கொந்தளித்த அஜித் ரசிகர்கள் வாரிசு படத்திற்கு எதிராக பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வந்தனர். இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்க்காத தில்ராஜு தற்போது ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.

Also read: 21 வருடம் கழித்து, ரெண்டே நிமிடத்தில் மனதை உருக்கிய சித்ராவின் குரல்.. வாரிசுவின் வைரலாகும் அம்மா பாடல்

அவர் கூறியிருப்பதாவது, நான் எது பேசினாலும் அதை சர்ச்சையாக்கி விடுகிறார்கள். 20 நொடி வீடியோவை பார்த்துவிட்டு எதையும் முடிவு செய்து விடாதீர்கள். நான் யாரையும் கிண்டல் செய்யவில்லை. ஒருவரை கேலி செய்வது என் நோக்கம் அல்ல. சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று தன்னுடைய கருத்து சர்ச்சை ஆனதற்கு அவர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.

இருப்பினும் அவருக்கு எதிரான கருத்துகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் அவர் பேசியதற்கு விஜய்யும் எவ்வித மறுப்பும் சொல்லாதது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த இரு படங்களும் வெளியாவதற்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் அடுத்தடுத்து வரும் செய்திகள் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

Also read: லோகேஷ்க்கு பின் இணையும் பிரம்மாண்ட கூட்டணி.. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் தளபதி 68

Trending News