சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஏன் இன்னும் நயன்தாராவை திருமணம் செய்யவில்லை? என கேட்ட நபர்.. எதிர்பார்க்காத ஒரு பதிலை சொன்ன விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாராவுடன் எப்போது திருமணம் என்ற கேள்விக்கு, அவரது காதலனும் இயக்குனரமான விக்னேஷ் சிவன் நறுக் பதில் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய இயக்குனர் விக்னேஷ் சிவன், பல்வேறு கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் அளித்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நயன்தாரா. வயசு ஆனாலும், இன்னும் இளமையும், உன் அழகும் குறையவில்லைனு வசனம் பேசுற மாதிரி இன்னும் காலேஜ் போய்ட்டு வர ஸ்டூடண்ட் மாதிரி இருக்கிறார்னு அவரது ரசிகர்கள் சொல்வதை இப்போதும் கேட்கலாம்.

ரசிகர்களை வசீகரித்து வரும் நயன்தாரா கைவசம் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை நயன்தாரா ஏற்கனவே 2 முறை காதல் முறிவை சந்தித்து மூன்றாவதாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. சுமார் 6 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள், எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்பது குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன், நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், ‘ஏன் நீங்கள் இன்னும் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளவில்லை? என கேள்வி எழுப்பினார்.

nayanthara-vignesh-shivan
nayanthara-vignesh-shivan

இதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், “திருமணத்துக்கு ரொம்ப செலவு ஆகும். அதனால் அதற்கான பணத்தை சேர்த்துவிட்டு, கொரோனா அச்சுறுத்தல் எல்லாம் நீங்கிய பிறகு திருமணம் செய்து கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.

காத்துவாக்குல காதல் பண்ணறது இருக்கட்டும். கல்யாணத்தையும் பண்ணிவிடுங்க பாஸ்னு சொல்றாங்க ரசிகர்களாகிய முக்கியஸ்தர்கள்.

Trending News