வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

வியாபாரம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் கீர்த்தி சுரேஷ்.. மாமன்னனை வச்சு நெட்பிளிக்ஸ்க்கு வைத்த கன்னிவெடி

Keerthy Suresh: குறுகிய காலத்திற்குள் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கீர்த்தி சுரேஷ். ஆனால் போகப் போக போட்டி அதிகமான நிலையில் இவரால் தாக்குப் பிடிக்க முடியாமல் தொடர் தோல்வியை அடைந்தார்.

முக்கியமாக ரஜினியின் தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்ததில் இருந்து இவருடைய மார்க்கெட் போய்விட்டது என்றே சொல்லலாம்.அதனால் அக்கடதசத்திற்கு சென்று நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

தற்போது மறுபடியும் இங்கே வந்து ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா மற்றும் பாலிவுட்டில் பேபி ஜான் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபத்தில் வெளிவந்த சைரன் படத்தில் அதிரடியாக போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தார். ஆனாலும் இப்படம் பெரிசாக சொல்லும் படி மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.

கன்னிவெடியால் இக்கட்டான சூழலில் இருக்கும் தயாரிப்பாளர்

அதே மாதிரி கன்னிவெடி என்ற படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை இயக்குனர் கணேஷ் ராஜா இயக்குகிறார். இப்படம் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக இருக்கப் போகிறது. இதை எஸ்ஆர் பிரபு தயாரிக்கப் போகிறார்.

இவர் ஏற்கனவே பெண்கள் சம்பந்தப்பட்ட கதைகளை தான் முக்கியத்துவம் கொடுத்து தயாரித்து வருகிறார். அந்த வகையில் அருவி, ஃபர்கானா, o2 போன்ற படங்களை இவர்தான் தயாரித்திருந்தார்.

மேலும் கீர்த்தி சுரேஷ்க்கு மாமன்னன் படத்தின் மூலம் மார்க்கெட் அதிகரித்தது. அதனால் கன்னிவெடி படத்தை தயாரிக்க முன் வந்திருந்தார். இந்த காரணத்திற்காகவே படம் எடுப்பதற்கு முன்பே நெட்ப்ளிக்ஸ் இடம் சேட்டிலைட் உரிமைகளை விற்று விட்டார்.

ஆனால் இன்னும் படப்பிடிப்பை ஆரம்பிக்காமல் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. அதற்குள் netflix தளத்திலிருந்து கன்னிவெடி படத்தை ரிலீஸ் பண்ணும் நேரம் வந்துவிட்டது.

இதனால் மிகப்பெரிய பஞ்சாயத்து போய்க் கொண்டிருக்கிறது. இதைப்பற்றி எதையும் கவலை கொள்ளாமல் கீர்த்தி சுரேஷ் தற்போது மற்ற படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

Trending News