விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தை தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் இந்த வருட இறுதிக்குள் ஆரம்பமாக இருக்கிறது.
இந்நிலையில் விஜய் குறித்து சில விஷயங்களை அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சில நாட்களாகவே விஜய்க்கும் அவருடைய அப்பாவுக்கும் இடையே சில மன வருத்தங்கள் இருக்கிறது. சமீபத்தில் கூட சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் அவர்களுடைய சதாபிஷேக விழாவை தனியாகத்தான் கொண்டாடினார்கள்.
Also read : உச்சகட்ட சர்ப்ரைஸில் ஆழ்த்தும் லோகேஷ்.. 21 வருடங்களுக்கு பின் தளபதி 67ல் இணையும் ஹீரோ
இது மீடியாவில் மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் விஜய் பற்றியும் பல செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் அவர்கள் இருவரும் பேசாமல் இருப்பது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் மனம் திறந்து பதில் அளித்துள்ளார்.
அதில் அவர், நாங்கள் இருவரும் பேசாமல் இருப்பது உண்மைதான். ஏனென்றால் பிள்ளைகள் ஒரு காலம் வரை தான் நமது பேச்சைக் கேட்பார்கள். பணம் சம்பாதிக்க ஆரம்பித்த உடனே அவர்களுடைய குணமும் மாறிவிடும். அப்பொழுது நாம் கூறுவது எதுவும் அவர்கள் காதில் விழாது. அப்படி இருக்கும் சூழலில் நான் பேசும் சில விஷயங்கள் விஜய்க்கு பிடிக்கவில்லை.
Also read : விஜய்க்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா.? சிவகார்த்திகேயன் நீங்க இன்னும் வளரணும் தம்பி!
அதனால்தான் இப்போது நாங்கள் இருவரும் அதிகமாக பேசிக் கொள்வதில்லை என்று நேரடியாகவே விஜய் குறித்து சில விஷயங்களை அவர் பேசியுள்ளார். ஏற்கனவே மீடியாவில் விஜய் பேரும், புகழும் அடைந்த பிறகு தன் தந்தையை கண்டு கொள்வதில்லை என்ற செய்திகள் பரவி வந்தது.
தற்போது அதை உண்மையாக்கும் வகையில் எஸ்ஏ சந்திரசேகர் பேசி இருப்பது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் விஜய் பணத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது போன்று அவர் கூறியிருப்பது திரைத்துறையில் ஒரு சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. என்னதான் மகன் மீது கோபம் இருந்தாலும் இப்படியா பேசுவது என்று சிலர் ஆதங்கத்துடன் பேசி வருகின்றனர்.
Also read : அனாதை போல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ் ஏ சந்திரசேகர்.. என்ன இருந்தாலும் இப்படியா பண்றது?