நம்ம சண்டை செய்யும்போது நம்ம பக்கம் நியாயம் இருக்கணும்.. ஆண்டவர் கொடுத்த அட்வைஸ்

Actor Kamal: உலக நாயகன் கமலஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக எப்போதெல்லாம் நேரம் கிடைக்குமோ அந்த சமயத்தில் தன்னால் முடிந்த வரை அறிவுரை சொல்வதை கமல் வழக்கமாக வைத்திருக்கிறார். அதுவும் பிக் பாஸ் வாயிலாக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் சில அறிவுரை கூறியிருக்கிறார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக படங்களை எடுத்து வருகிறார். அந்த வகையில் பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருக்கிறார்.

சமீபத்தில் மாமன்னன் படத்தின் விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் உலக நாயகன் கமலஹாசன் பங்கு பெற்றார். இந்நிலையில் மாரி செல்வராஜ் தன்னுடைய படங்கள் எடுக்க தேவர் மகன் படம் தான் முன் உதாரணம் என்று கூறியிருந்தார். அதாவது அந்த படம் சாதியை பெருமையாய் பேசும்படி எடுத்ததால் அதில் உள்ள இசக்கி போன்றோர் முன்னேற முடியாமல் தற்போதும் இருந்து வருவதாக மாரி செல்வராஜ் கூறியிருந்தார்.

Also Read : இந்தியன்-2 ரிலீஸ் தேதியை லாக் செய்த கமல்.. விக்ரம் வசூலை முறியடிக்க வரும் ஷங்கர்

மேலும் அதில் இசக்கியாக நடித்த வடிவேலுவை வைத்து தான் இந்த மாமன்னன் கதையையே உருவாக்கி உள்ளதாக மாரி செல்வராஜ் பேசியிருந்தார். இவ்வாறு தேவர் மகன் படத்தை மாரி செல்வராஜ் மோசமாக விமர்சித்து இருந்தாலும் பெரிய மனுஷன் ஆக நடந்து கொண்டு கமல் தனது பாணியில் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

அதாவது தனக்கும், இளையராஜா போன்ற பிரபலங்களுக்கும் வடிவேலுவை மிகவும் பிடிக்கும். ஆரம்பத்தில் தேவர் மகன் படத்தில் இவரை நடிக்க வைக்க பலரும் யோசித்தனர். பார்ப்பதற்கு ஒல்லியாக இருக்கிறார் இவர் இந்த கேரக்டருக்கு செட் ஆவாரா என கேள்விகள் எழுந்தது. ஆனால் இன்றும் தேவர் மகன் கிளைமாக்ஸ் காட்சி மனதில் நிற்க வடிவேலு தான் காரணம்.

Also Read : ஒரே நாளில் 4 படங்களை ரிலீஸ் செய்த கமல்.. வசூலில் அடித்து துவம்சம் செய்த கிரைம் கில்லர்

கடைசியில் இந்த பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று இசக்கி சொல்லும் போது, நீங்க ஏத்துக்கிட்டதெல்லாம் போதும் போய் படிங்கடா என்று சொல்வதற்கு ஒரு அழுகுரல் கேட்டால் தான் செய்ய முடியும் என்று கமல் கூறியிருந்தார். இதன் மூலமாகவே மாரி செல்வராஜுக்கு சரியான அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் பெரிய மனுஷன் என்பதை நிரூபித்து மாரி செல்வராஜை புகழ்ந்து பேசுகிறார். அதாவது இங்கு இது எல்லாம் மாறனும் என்று நினைக்கும் போது கோபத்தில் எதிர்த்தரப்பில் உள்ள நியாயம் தெரியாது. ஆனால் மாரி செல்வராஜ் நம்ப சண்டையிடும் போது நம்ம பக்கம் நியாயம் இருக்கணும் அதே போல் எதிர்பக்கமும் நியாயம் சேர்க்கிறார் என்று கமல் கூறியிருந்தார்.

Also Read : காதல் தோல்விக்கு தற்கொலை தான் முடிவு.. தகர்த்தெறிந்த புன்னகை மன்னன் கமலின் 5 ஹிட் படங்கள்

Next Story

- Advertisement -