வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொன்னியின் செல்வன் 2 எப்போது வெளிவரும்.? வெளிப்படையாகச் சொன்ன மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் வரலாற்றை காவியம் தான் பொன்னியின் செல்வன். பல வருடங்களுக்கு முன்பே எம்ஜிஆர், கமல் உட்பட பல ஜாம்பவான்கள் முயற்சி செய்த இந்த காவியம் இப்போதுதான் திரைப்படமாக உருவாகியுள்ளது.

அதன் காரணமாகவே இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாத இறுதியில் உலக அளவில் வெளியாக இருக்கிறது.

Also read:பொன்னியின் செல்வனுடன் மோதவிருக்கும் 2 பிரபலங்கள்.. தமிழனுக்கு தமிழனே சப்போர்ட் பண்ணலைனா எப்படி ?

தற்போது இப்பட ப்ரமோசனில் இருக்கும் படக்குழுவினர் ஒவ்வொரு நாளும் இப்படம் பற்றிய ஆவலை ரசிகர்களுக்கு தூண்டி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே டிவிட்டர் களத்தில் சோழ சாம்ராஜ்யத்தின் வரலாறு தான் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இதுவே படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பிரமோஷன் ஆக இருக்கிறது. மேலும் படம் வெளி வருவதற்கு முன்பே படத்தின் ஓடிடி உரிமையும் கிட்டத்தட்ட 120 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது. இதுவும் படகுழுவினரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Also read:சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன்.. சோழ சாம்ராஜ்யத்தை பெருமைப்பட வைத்த மணிரத்னம்

இந்நிலையில் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்ற சுவாரஸ்ய தகவலை தற்போது வெளியிட்டுள்ளார். மிகப்பெரிய வரலாற்றை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருப்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற தகவல் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அந்த வகையில் மணிரத்னம் பொன்னியின் செல்வன் வெளியான ஒன்பது மாதங்கள் கழித்து இரண்டாம் பாகம் வெளிவரும் என்று கூறியிருக்கிறார். இதனால் தற்போது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Also read:ரிலீசுக்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த மணிரத்தினம்.. பொன்னியின் செல்வனை கைப்பற்றிய நிறுவனம்

Trending News