திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இவ்வளவு வீராப்பு எங்கிருந்து வந்தது, ஈஸ்வரியின் எதிர்நீச்சல் ஆரம்பம்.. வெறியேறிய குணசேகரன்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ப்ரைம் டைம் சீரியலான எதிர்நீச்சல், மக்களின் ஃபேவரிட் சீரியலில் ஒன்றான எதிர்நீச்சல் தினம் தினம் யூகிக்க முடியாத கதைகளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்பொழுது குணசேகரன் தனது நரி தந்திரத்தை வைத்து பட்டம்மாள் அப்பத்தாவிடம் இருந்து 40% சொத்தை எவ்வாறு கைப்பற்றலாம் என்று வக்கீலின் ஆலோசனை மூலம் அதனை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

அப்பத்தாவின் மீது பாசம் உள்ளது போல் பாசாங்கு செய்து அப்பத்தாவின் எதிர்பார்ப்பிற்கு வளைந்து கொடுத்து செல்கிறார். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட அனைவரும் அப்பத்தாவின் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இது ஒரு புறம் இருக்க நந்தினி ரேணுகாவின் அட்ராசிட்டியானது மிக கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Also Read: பொண்டாட்டி கூட நடிக்க நம்பர் ஒன் சீரியலை விட்டு விலகிய கணவன்.. விஜய் டிவி துரத்திவிட்டும் அடங்கல

ஈஸ்வரி எப்பொழுதும் அமைதிப்படையாக இருந்து எல்லோரும் பேசுவதை மட்டுமே கேட்டுக் கொண்டு இருப்பவராக இருப்பார். ஆனால் தர்ஷனின் ஒழுக்கமின்மை காரணமாக கல்லூரியிலிருந்து பெற்றோரை அழைத்து வர சொல்லி இருப்பார்கள். ஆனால் குணசேகரனுக்கு ஆங்கிலம் பேச தெரியாத காரணத்தினால் தனது மனைவி ஈஸ்வரியை போக சொல்லுவார்.

குடும்பத்தில் உள்ள நடைமுறையை இன்றைய தலைமுறையின் மனதில் விதைத்ததால் பெண்கள் என்றால் சமூகத்தில் அடிமையானவர்கள் என்ற எண்ணம் தர்ஷன் மனதில் ஆழமாக குடிகொண்டுள்ளது.தனக்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒரு பெண் என்பதால் அவர்களை இழிவாக பேசுகின்றான்.

Also Read: 2022 ஆம் ஆண்டின் டாப் 10 சீரியல்கள்.. இந்த ஆண்டு முழுவதும் டஃப் கொடுத்த ஒரே சீரியல்

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரி தர்ஷன் உடன் வர முடியாது என்று வாக்குவாதம் செய்கிறார். அப்பாவின் புத்தி தப்பாமல் இருக்கு என்பதற்கு உதாரணமாக தனது அப்பா பேசுவது போலவே அம்மாவையும் இழிவாக பேசுகிறார்.இதைப் பொறுத்துக் கொள்ளாத ஈஸ்வரி தர்ஷனின் கன்னத்தில் ஓங்கி ஒரு ஆரை விடுகிறார்.இந்த சம்பவம் வீட்டில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

கடைசியில் ஈஸ்வரி சொன்ன அந்த வார்த்தை “நான் அவனுடைய அம்மா, அவன பெத்தவ“ என்ற வசனத்தை பேசி விட்டு பார்த்த பார்வை ஒரு சிங்கம் கர்ஜித்து எழுந்தது போல் ஒரு தோற்றத்தை தந்தது. குடும்பத்தில் உள்ள பெண்கள் இடையே தைரியம் கொண்டு வருவதற்கு ஜனனி பல போராட்டங்களை நடத்தினார்.ஆனால் அப்பொழுதெல்லாம் தைரியத்தை வெளி கொண்டு வராத பெண்கள் தங்களுக்கு என்று ஒரு பிரச்சனை வரும் பொழுது தானாக பொங்கி எழுவதை காண முடிகிறது.

Also Read: சன் டிவி டிஆர்பியை உடைக்க பலே திட்டம்.. புத்தம்புது 4 சீரியல்களை இறக்கிய விஜய் டிவி

இதனால் அப்பத்தாவும் ஜனனியும் இப்பொழுது தான் குடும்பத்தில் உள்ள பெண்களின் மாற்றம் கண்டு சந்தோஷம் அடைகின்றனர். ஜனனி ஈஸ்வரி இடம் நீங்கள் அடித்தது தர்ஷனை அல்ல வீட்டில் நடக்கும் அநியாயத்திற்கு நீங்கள் கொடுத்த முதல் பதிலடி என்று கூறுகிறார். ஈஸ்வரிக்கு இவ்வளவு வீராப்பு எங்கிருந்து வந்தது என விசாலாட்சியும் குணசேகரனும் உச்சகட்ட கோவத்தில் உள்ள நிலையில், தர்ஷன் உடன் ஈஸ்வரி கல்லூரிக்கு செல்கிறார். குணசேகரன் கோபத்தில் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending News