வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

எதிர்க் கட்சிகளின் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விளங்குகிறதா.? வெளியான அதிரடி தகவல்!

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் திமுகவிடம் 40 தொகுதிகளை தரும்படி காங்கிரஸ் பரிந்துரைத்துள்ளது. ஆனால் திமுக 15 தொகுதி முதல் 18 தொகுதி வரை மட்டுமே தர இயலும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ‘திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி தொடருமா?’ என்பது குறித்த சர்ச்சைக்குரிய பேச்சுவார்த்தை சமூக ஊடகங்களில் நடைபெற்று வருகிறது. இருப்பினும் திமுக கட்சி தனது முடிவில் உறுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ராகுல் காந்தி மேற்கொண்ட பிரச்சாரத்தில் திமுக கட்சி குறித்தோ, காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியின் கூட்டணி குறித்தோ ஏதும் குறிப்பிடப்படாததால் மக்கள் மத்தியில் இக்கூட்டணி நீடிக்குமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தின் மூலம் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களையும் மற்றும் பொது மக்களையும் ஈர்க்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் பாரம்பரிய வாக்கினை ஒன்று சேர்க்கும் வகையில் ராகுல் காந்தியின் பிரச்சாரம் தீவிரமாக உள்ளது.

அதேசமயம் திமுக கட்சி கம்யூனிஸ்ட் கட்சியிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் தோல்வி ஏற்பட்டுள்ளது. திமுக 5 தொகுதிகளில் மட்டுமே ஒதுக்க முடியும் என்று தெரிவித்தது கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிருப்தி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Trending News