ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

எதிர் கட்சியின் கூட்டணி சிதறியதா.? கடும் கோபத்தில் தோழமைக் கட்சிகள்!

சட்டப்பேரவை தேர்தலானது வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் அதி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு அதிமுக தனது கூட்டணி கட்சியான பாமக உடன் தொகுதி பங்கீடு குறித்து நடத்திய பேச்சுவார்த்தையில், 23 தொகுதிகளை பாமக கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. அதேபோன்று திமுகவும் தங்களது கூட்டணி கட்சிகளான ஐ.யு.எம்.எல். கட்சிக்கும் மற்றும் ம.ம.க. கட்சிக்கும் ஐந்து தொகுதியை ஒதுக்கியுள்ளது.

மேலும் திமுகவின் தோழமைக் கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.ச.க, ம.தி.மு.க போன்ற கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திய திமுக தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளது. திமுக தங்களின் கூட்டணி கட்சிகளுக்கு போதுமான அளவு இடத்தை ஒதுக்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால் திமுக தங்களின் கூட்டணி கட்சிகளுக்கு போதுமான அளவு தொகுதி பங்கீடு வழங்க மறுத்து வருகிறது அதுமட்டுமில்லாமல் அனைத்து தோழமை கட்சிகளுடனும் திமுக தொடர்ந்து பேரம் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் 2014ஆம் ஆண்டை தவிர 15 ஆண்டுகாலமாக காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியில் தொடர்ந்து இருந்து வருகிறது இத்தனை ஆண்டுகாலம் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிக்கு திமுக கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா? என்று காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் காங்கிரஸ் தனது மாநில மற்றும் மாவட்ட அளவிலான தலைவர்களை ஒன்றிணைத்து, அனைவரிடமும் கலந்து ஆலோசித்து, திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டுமா? என்கின்ற முடிவை விரைவில் வெளியிட உள்ளனர்.

எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு திமுக தங்களின் கூட்டணி கட்சிகளுடன் பிடிவாதம் காட்டி வந்தால் திமுகவின் கூட்டணி கட்சிகள் சிதறும் என்று அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது.

- Advertisement -spot_img

Trending News