ஜனநாயக சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பு (Association for Democratic Reforms) நடத்திய ஆய்வு முடிவில் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு குறித்த அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.
அதில் வருகின்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக குற்ற பின்னணி கொண்ட வேட்பாளர்கள் திமுகவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் திமுகவில் போட்டியிடும் வேட்பாளர்களில் 136 நபர்களில் மீது அறிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், அதைத்தவிர 50 பேர் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பு நடத்திய ஆய்வின் அடிப்படையில் திமுக வேட்பாளர்களில் 76% வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உடன் இருப்பதாகவும், அதில் குறிப்பாக 26% வேட்பாளர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அதேசமயம் தமிழகத்தைப் பொறுத்தவரை குறைந்தளவு குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அதிமுகவில் உள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் அதிமுகவின் 191 வேட்பாளர்களில், 46 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்களாக உள்ளனர்.
அதேபோல் சொத்து மதிப்பை பொருத்தவரையில், திமுகவில் 178 வேட்பாளர்களில் 155 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். மேலும் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் 21 வேட்பாளர்களில் 19 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால் தமிழகத்தில் அதிக கோடீஸ்வர வேட்பாளர்களை கொண்ட ஒரே கட்சி காங்கிரஸ் என்று ஜனநாயக சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பு ஆய்வு முடிவின் மூலம் தெரியவந்துள்ளது.