திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வாழ்வா, சாவா என்ற நிலையில் இருக்கும் சுந்தர் சி.. இதுல ஃபெயிலியர் ஹீரோவுக்கு கொடுத்த வாய்ப்பு

சுந்தர் சி ஆரம்பத்தில் காமெடி படங்கள் எடுத்து வெற்றி கண்ட நிலையில் சமீபகாலமாக அவரது படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருகிறது. அதுமட்டுமின்றி அரண்மனை படம் வெற்றி கொடுத்தாலும் அதன் பின்பு வெளியான படங்கள் ஃபெயிலியர் ஆனது. கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் படுமோசமான தோல்வி அடைந்தது.

இந்நிலையில் சுந்தர் சி அரண்மனை 4 படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இந்தப் படத்துடன் மற்றொரு படத்தையும் இயக்கும் திட்டத்தில் உள்ளாராம். அதாவது ஏற்கனவே அறிவிப்பு வெளியான பின்பு பாதியிலேயே கைவிடப்பட்ட படம் சங்கமித்ரா. ஆரம்பத்தில் இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன் போன்ற பிரபலங்கள் நடிப்பதாக இருந்தது.

Also Read : சங்கமித்ரா படத்திற்காக விட்டுக் கொடுத்த சுந்தர் சி.. அரண்மனை 4 இல் வைக்கப் போகும் ட்விஸ்ட்

மேலும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் படத்தை தயாரிப்பதாக கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களினால் படப்பிடிப்பு நடத்தாமலேயே நின்று போனது. இப்போது மீண்டும் சுந்தர் சி இந்த படத்தை இயக்கவிருக்கிறாராம். அதுமட்டுமின்றி லைக்கா இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.

இப்போது சுந்தர் சி கண்டிப்பாக ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்று வாழ்வா, சாவா நிலையில் இருக்கும்போது தொடர்ந்து பெயிலியர் படங்களை கொடுத்து வரும் ஹீரோவுக்கு சங்கமித்ரா படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார். அதாவது கடந்த சில வருடங்களாக தொடர் தோல்வி படங்களை விஷால் கொடுத்து வருகிறார்.

Also Read : விரைவில் உருவாக உள்ள அரண்மனை 4.. பிரபல ஹீரோவை வளைத்து போட்ட சுந்தர் சி

கடைசியாக அவரது நடிப்பில் வெளியான லத்தி படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் விஷாலுக்கு படம் கொடுக்க தயக்கம் காட்டி வருகிறார்கள். இப்போது தாமாக முன்வந்து சுந்தர் சி சங்கமித்ரா படத்தில் விஷாலுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி சங்கமித்ரா படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளாராம். விஜயின் பீஸ்ட் படத்தில் இவருக்கு ஸ்கோப் இல்லாத நிலையில் சங்கமித்ரா படத்தில் அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும்.

Also Read : 3 வருடங்களாக தலை காட்ட முடியாமல் போன 37 வயது நடிகை.. காட்டிய கவர்ச்சியில் மயங்கி வாய்ப்பு கொடுத்த சுந்தர் சி

Trending News