வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சோழ ராஜ்யத்தை யார் கைப்பற்றியது? சிலிர்க்க வைத்த மணிரத்தினம், பொன்னியின் செல்வன்-2 முழு விமர்சனம்

இப்போது சரித்திர படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதிலும் மிகவும் புகழ் பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் திரை வடிவில் சாத்தியமாகி இருப்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று தான். இப்படி ஒரு முயற்சியை வெற்றிகரமாக நடத்தி காட்டி இருக்கும் மணிரத்தினத்திற்கு ஒரு பெரிய கைத்தட்டலே கொடுக்கலாம்.

அதற்கு பக்க பலமாக இருந்த லைக்கா நிறுவனம், படத்தை தாங்கி பிடித்த நடிகர்கள் என பலரும் இந்த சரித்திரத்திற்காக பெரும் முயற்சி எடுத்து இருக்கின்றனர். அந்த வகையில் முதல் பாகத்தை விடவும் இந்த இரண்டாம் பாகம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதன் விரிவான விமர்சனத்தை இங்கு காண்போம்.

Also read: தங்கலான் கெட்டப்பில் வந்த கரிகாலனுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்.. என்ன கொடுமை சார் இது.!

முதல் பாகம் பொன்னியின் செல்வன் நீரில் மூழ்கும் ட்விஸ்ட்டுடன் முடிக்கப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து இந்த இரண்டாம் பாகத்தின் தொடக்கத்திலேயே உலக நாயகனின் குரலால் முதல் பாகம் விளக்கப்படுகிறது. அதன் பிறகு தான் இரண்டாம் பாகத்தின் காட்சிகள் விரிகிறது. அதில் கடல் சீற்றத்தில் சிக்கி எப்படியோ வந்திய தேவன், அருண் மொழிவர்மன் ஆகியோர் திரும்பி வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து நந்தினியின் சூழ்ச்சியால் கடம்பூருக்கு வரும் ஆதித்த கரிகாலனை சுற்றி பின்னப்படும் சதி வலை என காட்சிகள் பரபரப்பாக செல்கிறது. இறுதியில் நந்தினியின் திட்டம் நிறைவேறியதா, சோழ அரியணை யாருக்கு கிடைத்தது என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த இரண்டாம் பாகம்.

Also read: வம்சத்தை கருவறுக்க காத்திருந்த நந்தினி.. நேருக்கு நேர் சந்தித்த ஆதித்த கரிகாலன், மிரட்டிவிட்ட பொன்னியின் செல்வன் 2

பல நட்சத்திர கூட்டம் நடித்திருக்கும் நிலையில் இயக்குனர் யாருக்கும் குறை வைக்காமல் காட்சியை நகர்த்தி இருக்கிறார். அதிலும் ராஜ்ஜியத்தை காப்பதற்காக போராடும் குந்தவை, நண்பனாகவும், வீரனாகவும் வரும் வந்திய தேவன், ஊமை ராணி போன்ற கதாபாத்திரங்கள் அருமையாக செதுக்கப்பட்டிருக்கிறது.

இருந்தாலும் இந்த கேரக்டர்களை எல்லாம் தாண்டி விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரங்கள் நட்சத்திரமாக ஜொலிக்கிறது. அதிலும் இருவரும் சந்தித்துக் கொள்ளும் அந்த ஒரு காட்சியே ஒட்டுமொத்த படத்துக்குமான முத்தாய்ப்பாக இருக்கிறது. மேலும் கர்ஜிக்கும் சிங்கம் போன்று மிரட்டி இருக்கும் விக்ரம் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து இருக்கிறார்.

Also read: களை கட்டும் சோழர்களின் வரலாறு.. பொன்னியின் செல்வன் 2 எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

அதைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தை குலைக்காமல் கண்ணியமான நடிப்பை கொடுத்திருக்கும் ஜெயம் ரவியும் பாராட்டுகளை தட்டிச் செல்கிறார். அதனுடன் ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசையும் அருமையான உணர்வை கொடுக்கிறது. இப்படி ஆடியன்ஸ் சிலிர்த்துப் போகும் அளவுக்கு ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார் மணிரத்தினம்.

இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் இருக்கும் ட்விஸ்ட் எதிர்பாராத வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படி மிகப்பெரும் சாம்ராஜ்யத்தின் வரலாற்றை 5 மணி நேரத்திற்குள் தெளிவாக விளக்கி இருக்கிறார் மணிரத்தினம். இதற்காகவே அவரை எத்தனை முறை பாராட்டினாலும் தகும். அந்த வகையில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் இந்த சரித்திர படம் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆக மொத்தம் இந்த பொன்னியின் செல்வன் வெற்றிவேல் வீரவேல் என முழக்கமிட வைத்திருக்கிறது.

Also read: 10 பிரபலங்களுக்கு பல கோடி சம்பளத்தை வாரி வழங்கிய மணிரத்னம்.. முதல் மூன்று இடம் யாருக்கு தெரியுமா.?

Trending News