வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் காதல் புறா.. ஆனந்தியை கழுவி ஊத்திய குருநாதர்

Bigg boss 8 Tamil: பிக் பாஸ் ஆரம்பித்து 20 நாட்களை தாண்டி நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். இதில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் அருண், தர்ஷா, அன்சிதா, ஜாக்லின், முத்துக்குமரன், சத்யா, சௌந்தர்யா என எட்டு பேர் இருக்கிறார்கள். அந்த வகையில் மக்களின் ஓட்டு கணக்கின்படி இந்த வாரத்தில் கம்மியான ஓட்டுகளை மூன்று பேர் பெற்று டேஞ்சர் ஜோனில் இருக்கிறார்கள்.

அவர்கள் யார் என்றால் சத்யா, அன்சிதா, தர்ஷா. இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் தர்ஷா ஓவர் டிராமா பண்ணி ஒண்ணுமே தெரியாதபோல் முகத்தை வைத்து நாடகம் ஆடி மற்றவர்களை கடுப்பேற்றுகிறார். அந்த வகையில் இவருக்கு எக்கச்சக்கமான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் இவரை விட அன்சிதா தான் வெளியே அனுப்ப வேண்டும் அதுதான் நம்முடைய டார்கெட் என்று மக்கள் அன்சிதாவை கழுவி கழுவி ஊற்றுகிறார்கள்.

அந்த வகையில் கம்மியான ஓட்டுகளை பெற்றிருப்பதும் அன்சிதா தான். ஏற்கனவே கடந்த வாரம் அர்னாவ் வெளியேறியதால் பின்னாடியே காதல் புறாவையும் அனுப்பி வைத்து விட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். அதனால் இந்த வரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது அன்சிதா.

இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டுக்குள் புதுசாக ஒரு காதல் போய் கொண்டு இருக்கிறது என்று தெரியும். அதே மாதிரி பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் மற்ற 14 போட்டியாளர்களுக்கும் புரிந்து விட்டது. பவித்ரா, அன்சிகா மற்றும் சுனிதா மூன்று பேரும் சேர்ந்து தர்ஷா, சத்யா பின்னாடியே அலைகிறார். எப்ப பாத்தாலும் அவருடனே சுற்றி வருகிறார் என்று சுனிதா சொல்கிறார்.

உடனே அன்சிதா ஆமாம் இதை நானும் கவனிச்சேன், ஆனால் இது ரொம்பவே மோசமாக இருக்கிறது. ஏனென்றால் சத்யாவுக்கு கல்யாணம் ஆகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. அப்படி இருந்தும் தர்ஷா, சத்யா பின்னாடி அலைகிறது தவறு என்று அன்சிதா சொல்வதுதான் மிகப்பெரிய காமெடியாக இருக்கிறது.

இது சம்பந்தமான ஒரு பிரச்சினையை கொண்டு வரும் வகையில் சுனிதாவிற்கும் தர்ஷாவுக்கும் இடையே பூகம்பம் வெடித்து விட்டது. என்னதான் தர்ஷா, சத்யா பின்னாடி சுத்தினாலும் சத்தியா பொருத்தவரை அந்த மாதிரி ஒரு நினைப்பு இல்லாத போல் தான் தெரிகிறது. ஆனாலும் அவ்வப்போது தர்ஷாவை பார்த்து பாட்டு படிப்பது, நக்கலாக பார்த்து சிரிப்பது எல்லாம் கொஞ்சம் நம்புற மாதிரியும் இருக்கிறது. ஒருவேளை இது கண்டன்டுக்காக கூடவும் சத்யா இந்த மாதிரி பண்ண வாய்ப்பு இருக்கிறது.

அடுத்ததாக பிக் பாஸ் நேற்று கொடுத்த டாஸ்க் படி ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை சேர்ந்திருந்து விளையாட சொன்னது. ஆனால் அந்த டாஸ்க் முடிந்த பிறகும் ஜெஃப்ரி மற்றும் ஆனந்தி பிக் பாஸ் சொன்னதை ஃபாலோ பண்ணாமல் இஷ்டத்துக்கு அழைக்கிறார்கள். அந்த வகையில் ஆனந்தி, ஆண்கள் அணியிடம் சில விஷயங்களை பேசத் தொடங்கிய பொழுது கோபத்தில் கொந்தளித்த பிக்பாஸ் அனைவரையும் ஒன்றாக கூடி உட்கார சொன்னது.

அதன் பிறகு ஃப்ரீ டாஸ்க் நாமினேஷன் பற்றி சொல்லிய பிறகு ஆர்ஜே ஆனந்தியையும் ஜெஃப்ரியும் கழுவி ஊத்தும் விதமாக நான் சொன்னதை நீங்க ஏன் ஃபாலோ பண்ணவில்லை. அப்ப என்னோட பேச்சுக்கு மதிப்பில்லையா என்று ஆனந்தியை லெப்ட் ரைட் வாங்கும் அளவிற்கு பிக் பாஸ் வச்சு செஞ்சு விட்டார். அதாவது தற்போது இருக்கும் போட்டியாளர்களுக்கு இந்த மாதிரி பிக் பாஸ் கடுமையாக இருந்தால் தான் ஒழுங்காக விளையாடுவார்கள் என்று குருநாதர் முடிவு பணி அதற்கு ஏற்ற மாதிரி காய் நகர்த்தி வருகிறார்.

Trending News