செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 3, 2024

உலக அழகன் யார் தெரியுமா? இளம் பெண்களின் டிரீம் பாய்.. இதில், 2 வது மற்றும் 3 வது இடத்தில் இவர்களா?

உலக அழகனாக பிடிஎஸ் இசைக்குழுவைச் சேர்ந்த பிரபல தென்கொரிய பாடகரை முன்னணி இதழ் தேர்வு செய்துள்ளது. பல பெண்களின் டிரீம் பாயாக உள்ள அவரை தேர்வு செய்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.

BTS இசைக்குழு

சில ஆண்டுகளுக்கு முன்பு தென்கொரியாவைச் சேர்ந்த 7 பாடகர்கள் இணைந்து பாங்க்டான் பாய்ஸ் பிடிஎஸ் என்ற இசைக்குழுவைத் தொடங்கினர். இதன் முதல் ஆல்பம் டூ கூல்; டூ ஸ்கூல் இசை ஆல்பத்தை வெளியிட்டு அந்த நாட்டின் பட்டி தொட்டியெங்கும் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளனர்.

ஹிப்ஹாப் இசை வகையில் தங்கள் பாடல்களை பிடிஎஸ் இசைக்குழு வெளியிட்டு வரும் நிலையில், இந்த இசைக்குழுவின் இசைக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். முக்கியமான இவர்களின் பாடல், உடைகள், பாடல் வரிகள் இதெல்லாம் 2 கே கிட்ஸ்களை கவந்துள்ளது. சிலரை அடிமையாக்கி வைத்துள்ளது என்றே கூறலாம்.
.
இந்தக் குழுவைச் சேர்ந்தவர் வி. இவர் 2024 ஆம் ஆண்டிற்கான உலகின் மிக அழகான ஆண் என்ற பட்டத்தை வென்றுள்ளார். உலக அளவில் நுபியா இதழ் நடத்திய வாக்கெடுப்பில், சுமார் 70 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வி முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

பாடகர் வி பற்றிய சுவாரஸ்ய தகவல்

இவர் வறுமையான குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்கும்போதே இசையில் ஆர்வம் செலுத்தி, பிக்ஹிட் எண்டர்டெயின்மெண்டில் பயிற்சியாளாராகப் பணியாற்றினார். அதன்பின் 2020 ல் கல்லூரியில் புராட்காஸ்ட் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் பட்டம் பெற்று, இசைத்துறையிலும் கவனம் செலுத்தினார்.

கிம் டே ஹியூங் என்ற இயற்பெயர் கொண்ட அவர் தென்கொரிய இசைத்துறையில் பல விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். குறிப்பாக மெலன் இசை விருதுக்கு பரிந்துரைப்பட்ட அவர், சில ஆண்டுகள் கழித்து 2019 ஆம் ஆண்டு சிறந்த நடிகர், நடனக் கலைஞருக்கான சூம்பி விருதுகளை வென்றார். அதேபோல், பெஸ்ட் OST க்கான அபான் இசை விருதுகளையும் வென்றுள்ளார்.

2 வது மற்றும் 3 வது இடம் யாருக்கு?

மேலும், உலக அளவில் சினிமா நடிகர்கள், விளையாட்டு, வீரர்கள், பாடகர்கள், ஃபெர்பாமர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்தோர் இப்போட்டியில் இருந்தாலும், 2024 ஆம் ஆண்டிற்கான அழகன் பட்டியலில் முதலிடம் பிடித்த பாடகர் வி-க்குப் அடுத்த இடத்தில், ஹாரிபாட்டர் படத்தில் நடித்த ராபர்ட் பாட்டிசன், ஜஸ்டின் பைபர் ஆகியோர் முறையே 2 மற்றும் 3 வது இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- Advertisement -spot_img

Trending News