வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

சைலன்டா சோழிய முடித்துவிட்ட திமுக, விக்கிரவாண்டி தேர்தல் 2ம் இடம் யாருக்கு தெரியுமா.? நெருக்கடியில் சீமான்

Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நல குறைவால் மரணம் அடைந்ததை ஒட்டி அங்கே இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. அதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி. அன்புமணி, நான் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போன்ற 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில் 82.49 % வாக்குகள் பதிவாயிருக்கிறது. இந்நிலையில் வாக்கு என்னும் மையமாக பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அந்தப் பகுதியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனி என்பவர்கள் நேற்று மாலை நேரில் போய் பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறார்கள்.

முன்னிலை பெற்ற திமுக கட்சி

ஆய்வை முடித்த கையோடு இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு இருக்கிறது. அப்படி தபால் வாக்குகளை எண்ணும் பொழுது அந்த இடத்தில் திடீரென்று சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம் தபால் வாக்குகளில் உள்ள வரிசை எண்கள் தவறாக இருப்பதாக பாமக கட்சியில் உள்ளவர்கள் திமுக முகவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்கள்.

பிறகு தேர்தல் அதிகாரிகள் அதை விசாரணை செய்து அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மேற்கொண்டு பணியை தொடங்கி வைத்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து ஒவ்வொரு சுற்றுகளும் முடிந்த நிலையில் தற்போது பத்து சுற்றுகள் முடிந்து கிட்டத்தட்ட 35000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகித்திருக்கிறது. இவர்களுடன் போட்டி போட்ட மற்ற கட்சிகளை ஒட்டுமொத்தமாக சோழிய முடித்து விட்டது.

அந்த வகையில் திமுக 63205 வாக்குகள், இரண்டாவது இடத்தில் பாமக 27845 வாக்குகள் பெற்றிருக்கிறது. இதில் கொஞ்சம் கூட நெருங்க முடியாமல் இக்கட்டான சூழ்நிலையில் நான் தமிழர் கட்சியின் அபிநயா 5265 வாக்குகளை பெற்றிருக்கிறது. சமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கட்சி நின்ற இடத்தில் எல்லாம் வெற்றி பெற்ற நிலையில் இந்த ஒத்த இடத்தை மட்டுமா விட்டு வைக்கப் போகிறது. ஆக மொத்தத்தில் தமிழ்நாட்டில் திமுகவின் ஆட்சியின் வெற்றி உறுதியாகிவிட்டது.

திமுக உடன் மோத களம் இறங்கிய வலுவான கட்சிகள்

- Advertisement -spot_img

Trending News