வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

யாருக்கு இப்படி ஒரு குடுப்பனை கிடைக்கும்.. பொன்னியின் செல்வன் படத்தில் இவர்தான் ப்ளே பாய்!

மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த மாதம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸாகிறது.

கூடிய விரைவில் இரண்டாம் பாகமும் வெளிவரும். இந்நிலையில் இந்த படத்தில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி இதுவரை எந்த நடிகருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் பொன்னியின் செல்வன் படத்தில் தனக்கு கிடைத்திருப்பதாக மற்ற நடிகர்களை எல்லாம் காண்டேற்றி உள்ளார்.

Also Read: அதை மட்டுமே சாப்பிட்டு 20 கிலோ கம்மியான ஜெயம் ரவி.. இது சாத்தியமா என குழம்பிய மணிரத்னம்

ஜெயம்ரவி பெரிய பட்ஜெட் படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருப்பது சூப்பராக இருந்தது என்றும் கூறியிருக்கிறார். மேலும் படப்பிடிப்பில் நடந்த சுவாரசியங்களை ஜெயம்ரவி தற்போது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நிறையவே பேசி இருக்கிறார்.

இதில் உலக அழகி பட்டத்தைப் பெற்ற ஐஸ்வர்யா ராய் மற்றும் மிஸ் சென்னை பட்டத்தை வென்ற திரிஷா, மிஸ் வேல்ட் ஷோபிதா உள்ளிட்ட மூன்று அழகிகளுடன் சேர்ந்து நடிக்கும் பாக்கியத்தை ஜெயம்ரவி பெற்றதாக கூறி கெத்து காட்டுகிறார்.

Also Read: ஜெயம் ரவி கேரக்டருக்கு இப்படி ஒரு டிவிஸ்ட்டா.. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இருக்கும் சஸ்பென்ஸ்

யாருக்கு இப்படி ஒரு குடுப்பனை கிடைக்கும். இதுவரைக்கும் எந்த நடிகர்களுக்கும் இந்த மாதிரி சான்ஸ் கிடைத்திருக்காது. எனக்கு பொன்னியின் செல்வன் படத்தில் இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த மணிரத்னம் சாருக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தைப் பார்க்கும் போது எல்லோரும் ஐஸ்வர்யா, திரிஷா ஃபேஸ் எக்ஸ்பிரஷன் சூப்பரா இருக்கு என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக அமைந்திருப்பதாகவும் ஜெயம் ரவி பட புரமோஷன் நிகழ்ச்சிகள் ஓபனாக பேசி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்தி உள்ளார்.

Also Read: பட்ஜெட்டில் பாதி கூட வசூல் செய்யாத கோப்ரா.. விக்ரம் மார்க்கெட்டை காப்பாற்றுவாரா மணிரத்தினம்

Trending News