உடல் முழுக்க இவ்வளவு பிரச்சனையா? கல்யாணத்திற்கு முன்பே மூட்டை முடிச்சுடன் அக்கட தேசம் சென்ற விஷால்

45 வயதாகும் விஷால் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்துவிட்டு தான் திருமணம் செய்வேன் என சூளுரைத்தார். ஆனால் கட்டிடமும் கட்டிய பாடில்லை, திருமணமும் ஆன பாடில்லை. அது மட்டுமல்ல மோசடி வழக்கிலும் சிக்கிய விஷால் இப்போது படங்களில் நடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்.

இதனால் தரமான படங்களையும் இயக்குனர்களையும் தேர்வு செய்து முன்பை விட நடிப்பில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் இவருடைய போதாத காலம் இவருக்கு உடல் முழுக்க ஏகப்பட்ட பிரச்சனை இருப்பதால், மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு அக்கட தேசத்திற்கு சிகிச்சைக்காக கிளம்பிவிட்டார்.

Also Read: மூக்கு முட்ட குடிச்சிட்டு காரில் மோதிய விஷால் பட நடிகை.. போதை தெளிந்த பின் பட்ட அசிங்கம்

லத்தி படத்தின் படு தோல்வியை அடுத்து விஷால் ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தை வெற்றிகரமாக முடித்து விட்டார். டைம் ட்ராவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில், விஷால் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது.

இந்த படத்திற்கு டப்பிங் பேசுவதற்குள் விஷாலுக்கு ஏற்றப்பட்ட பிரச்சனை வந்துவிட்டது. அதனால் டப்பிங்கை அப்படியே போட்டுவிட்டு சிகிச்சைக்காக கிளம்பிவிட்டார். சிம்புவை போல் கேரளாவிற்கு சென்று ஆயில் மசாஜ் செய்கிறார். கல்யாணம்கூட விஷாலுக்கு இன்னும் ஆகவில்லை, அதற்குள் உடம்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டு விட்டது.

Also Read: வில்லியாக மிரட்டிய வரலட்சுமி சரத்குமாரின் 5 படங்கள்.. சுந்தரை மிரள விட்ட கோமளவல்லி

அவரால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. முதுகு தண்டில் பயங்கர வலி. ஏற்கனவே அவருக்கு கண் பாதிப்பு பிரச்சினை இருந்து வருகிறது. தலைவலி பிரச்சினை வேறு இருக்கிறது. இப்படி பல பிரச்சினைகள் சூழ்ந்து கொண்டுள்ளதால் இயற்கையான முறையில் கேரளா சென்று ட்ரீட்மென்ட் எடுக்கிறார்.

ஒரு மாதம் அங்கேயே ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்ட பிறகு தான் மார்க் ஆண்டனி படத்திற்கு டப்பிங் கொடுக்கவிருக்கிறாராம். அதுமட்டுமல்ல அருண் விஜய் வைத்து வணங்கான் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் ஹரி, அந்த படத்தை முடித்த பிறகு விஷால்- ஹரி கூட்டணியில் ஒரு படத்தில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

Also Read: ஆண்டவன் மேல பாரத்தை போட்டு மாஸ் நடிகரை நம்பும் விஷால்.. வாழ்வா சாவா போராட்டத்தில் வெளிவரும் படம்