செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விவேக் மறைவுக்கு வராத அஜித்.. ஒரு அறிக்கை கூட விடாததற்கு காரணம் என்ன?

விவேக் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக இறந்தது தமிழ் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. அந்த அளவுக்கு தன்னுடைய நல்ல செயல்களாலும் நல்ல உள்ளதாலும் பல மனிதர்களை சம்பாதித்து வைத்திருந்தார். விவேக்கிற்கு வெளியில் மட்டுமல்லாமல் சினிமா வட்டாரங்களிலும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் என அனைவரும் நெருக்கமானவர்களாக இருந்தனர்.

அதனை அவருடைய இரங்கல் நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. சின்ன நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை அனைவருமே நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அப்படிப்பட்ட விவேக் தன்னுடைய சினிமா கேரியரில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித்துடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

ஆனால் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருமே விவேக்கின் இறுதி சடங்கிற்கு வரவில்லை. விஜய் தளபதி 65 படத்திற்காக தற்போது ஜார்ஜியா நாட்டில் இருப்பதால் வர முடியாமல் போய் இருக்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

ஆனால் தல அஜித் சென்னையில்தான் இருந்தார். வந்திருக்கலாமே. அல்லது எப்போதுமே ஒரு அறிக்கை ஒன்றை வெளியிடுவாரே. அதுபோலாவது விவேக்கிற்கு ஒரு இரங்கல் ஆறுதல் கொடுத்திருக்கலாம் என தல ரசிகர்களே வேதனைப்படுகின்றனர்.

அஜித்தின் ஆரம்பகால வெற்றிப்படங்கள் பலவற்றிலும் விவேக் இணைந்து நடித்திருந்தார் என்பதும் கூடுதல் தகவல். இவ்வளவு ஏன் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படத்தில் கூட விவேக் மற்றும் அஜித் காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதேபோல்தான் சமீபத்தில் அஜித்தின் சினிமா குருநாதராக இருந்த எஸ் பி பாலசுப்ரமணியம் இறுதி சடங்கிற்கு கூட அஜித் வரவில்லை.

அஜித் வட்டாரங்களில் விவேக் குடும்பத்தினரை தல அஜித் போனில் தொடர்பு கொண்டு பேசினார் என்பது போன்ற செய்திகளை கசிய விட்டுக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் அஜித் வந்தால் அந்த இடத்தில் ரசிகர் கூட்டம் அதிகமாக இருக்கும் எனவும், யாருக்கும் எந்தவித சங்கடத்தையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும் அஜித் வரவில்லை என்கிறார்கள் தல வட்டாரங்கள்.

vivek-ajith-cinemapettai
vivek-ajith-cinemapettai

Trending News