வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சுதா கொங்கரா படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் விலகியது ஏன்? அட இதெல்லாம் காரணமா!

சுதா கொங்கராவின் புதிய படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் விலகியுள்ளதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படத்தை ரஜினி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, சன்பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே சில படங்களில் முகம் காட்டியிருக்கும் நிலையில் அவர் ஹீரோவாக நடிக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் வைத்தனர்.

அதன்படி, அவரும் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகக் கூறப்பட்டது. சமீபத்தில் ஸ்ருதிஹாசனுன் இணைந்து ஒரு இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்து அசத்தினார். அதன்பின், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் புற நானூறு படத்தில் அதர்வா சிவாவின் தம்பியாக நடிப்பதாகவும், லோகேஷ் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவில்லை என தகவல் வெளியாகும் நிலையில் அதற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யாவுக்கு எழுதப்பட்ட ஆக்சன் பாணியில் உருவாகவுள்ள புறநானூறு படத்தை முதல் காப்பி அடிப்படையில் சுதா கொங்கரா தயாரிக்கவுள்ளார். ஜிவியின் இசையில் 100வது படமாகும்.

படத்தில் இருந்து விலகியது ஏன்?

இப்படத்தில் சிவா ஹீரோவாக நடிக்கும் நிலையில் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிக்க லோகேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, லுக் டெஸ்டும் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தில் இருந்து அவர் விலகிவிட்டார். இதுகுறித்து வெளியான தகவலின்படி, சூப்பர் ஸ்டாரின் கூலி படத்தை லோகேஷ் இயக்கி வருவதால், இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜனவரியில்தான் முடியும்.

அடுத்த படத்தில் நடிப்பாரா லோகேஷ்?

மொத்தப் படப்பணிகளும் முடிய அடுத்தாண்டு ஜீன் ஆகிவிடும். எனவே அதற்கு முன்னதாகவே புறநானூறூ பட ஷூட்டிங்கை தொடங்குவதால், ரஜினி படத்தை இயக்கிக் கொண்டே, அதில் நடிக்க முடியாது என்ற காரணத்தால்தால் அப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகிவிட்டார் எனவும், நிச்சயம் சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் லோகேஷ் நடிப்பதாக கூறியுள்ளார் என தகவவல் வெளியாகிறது.

Trending News