செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

விஜய்69 பட தயாரிப்பு நிறுவனம் பாலகிருஷ்ணா படத்தின் Rights-ஐ வாங்கியது ஏன்? அந்த பயம் இருக்கட்டும்

தமிழ் சினிமாவில் விஜய் படத்திற்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பு எல்லோருக்குமே தெரிந்தததுதான். மற்ற நடிகர்களின் படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தால் அது தியேட்டரில் வசூலை பாதிக்கும். ஆனால், விஜய் படத்திற்கு அப்படியெல்லாம் இருக்காது என பலரும் கூறியுள்ளனர்.

அவர் இதுவரை நடித்த படங்களுக்கே அப்படியென்னால் அவரது கடைசி படத்துக்கு எப்படி இருக்கும்? ஆம் விஜய் 69 என்ற அவரது கடைசி படத்துக்கு இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் 69 படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை கே.வி.என். நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், எப்போது அடுத்த அப்டேட் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் விஜய் 69 படமா?

இந்த நிலையில், சில வருடங்களாகவே விஜய் படங்கள் தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்படாத நிலையில், விஜய்69 படம் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என தகவல் பரவியது.

இந்த நிலையில், காதும் காதும் வைத்த மாதிரி, பகவந்த் கேசரி பட உரிமையை கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது படம் என்பதால், விஜய்க்கு ஏற்ற மாதிரி மாஸாக ஹெச்.வினோத் கதை ரெடி பண்ணி ஷூட்டிங் நடத்தி வருவதாக கூறப்பட்டது.

இருப்பினும் நாளை படத்தின் ரிலீஸின் போது, சட்ட ரீதியாக எந்த பிரச்சனையும் வரக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே எச்சரிக்கையாக பல கோடிகள் கொடுத்து, பகவந்த் கேசரி படத்தின் உரிமையை வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் அந்த பயம் இருக்கட்டும் என சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

அப்படத்தன் ரீமேக் இல்லையென்றாலும் அதன் தழுவலாகக் கூட இப்படம் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், ஸ்ரீலீலால், அர்ஜூன் ராம்பால், சரத்குமார் நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படம் ரூ.100 கோடி வசூலை வாரிக்குவித்து சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Trending News