ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பாகுபலி மாதிரி படத்தில் அஜித் ஏன் நடிக்கவில்லை? அது மட்டும் நடந்திருந்தா?

அஜித்குமாரின் தரிசனம் கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அவர் கார் ரேஸிங் அணியின் புகைப்படம் வெளியாகி வைரலானது.

இதைத்தொடர்ந்து, அஜித், அர்ஜூன், திரிஷா ஆகியோர் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில் உருவாகி வரும் நேற்று முன் தினம் இரவில் சன் டிவியின் யூடியூப் பக்கத்தில், அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து ஆங்கிலத்தின் விடாமுயற்சி பட டீசரை படக்குழு இன்று வெளியிட்டனர். இப்படம் தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவ்விரு மொழிகளில் மட்டுமல்லாது. பான் இந்தியா படமாக வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

இதற்கிடையே, ஆதிக் ரவிச்சந்திரன் சையில், குட் பேட் அக்லி படத்திலும் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தில் அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வரும் நிலையில் இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு குவிந்துள்ளது. இப்படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகும் எனத் தெரிகிறது. அடுத்தாண்டு அஜித்தின் 2 படங்கள் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அஜித்தை வைத்து பாகுபலி மாதிரி படம் பண்ண முடிவெடுத்தேன் – விஷ்ணுவர்தன்

இந்த நிலையில், அஜித்தின் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களைய இயக்கிய விஷ்ணுவர்தன், சமீபத்தில் யூடியூப்புக்கு பேட்டியளித்தார். அதில் பல விசயங்களை அவர் பகிர்ந்து கொண்டார். அஜித் குறித்து அவர் பேசியதாவது; அஜித்தை வைத்து பாகுபலி போல் ஒரு படத்தை இயக்க முடிவு செய்ததாகவும், ஆனால், திடீரென அப்படம் கைவிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அஜித்திற்கு பெரியளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதனால் அவர் எந்தப் படம் நடித்தாலும் அதைக் கொண்டாட ரசிகர்கள் இருக்கும் போது, பாகுபலி மாதிரி படத்தை அஜித்தை வைத்து எடுங்கள். அப்படம் 1000 கோடிக்கு மேல் வசூலாகும் என ரசிகர்கள் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

அஜித்தின் மன்னர் வேடமிட்ட ஏஐ புகைப்படம் சமீபத்தில் வெளியான போதே, அவர் பாகுபலி மாதிரி படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறினார். ஆனால் அந்தப் பட வாய்ப்பு வந்த பின்னும் அதை எடுக்கவில்லை, அப்படத்தை மீண்டும் எடுக்க ஏன் முயற்சிக்க கூடாது? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending News