ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவனின் இயக்கம் எந்த அளவுக்கு பேசப்பட்டதோ அதே அளவுக்கு படத்தை தாங்கி நிறுத்தியது ஜிவி பிரகாஷின் இசை தான் என்பதை எப்படி படக்குழுவினர் மறந்தார்கள் என்பதுதான் தெரியவில்லை.
இன்றும் சோழ மன்னர்களின் வாழ்க்கை வரலாறுகளை யூடியூபில் பார்க்கும்போது பின்னணியில் ஜிவி பிரகாஷ் இசை தான் அனைவரது மனதிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் அவர் இல்லாதது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான்.
ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி இல்லையா? என ரசிகர்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா எப்படி ஒப்பந்தம் ஆனார் என்பதும் ரசிகர்களுக்கு குழப்பம்தான்.
இன்றும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியிலும் ஜிவி பிரகாஷின் பின்னணி இசையை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கும்போது ஏன் இந்த குளறுபடி.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இறுதியாக கார்த்தி, சோழமன்னனின் பையனை தூக்கிக்கொண்டு செல்வது போன்ற காட்சி அமைத்து அதில் சோழனின் பயணம் தொடரும் என குறிப்பிட்டிருந்தனர். தற்போது அந்த சிறு வயது பையனாக ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிக்க இருப்பது தனுஷ் தான் என்பது தெரியவந்துள்ளது.
இருந்தாலும் அந்த பையனை எப்படியெல்லாம் கார்த்தி ஒரு திறமையான சோழ மன்னனாக மாற்றுகிறார் என்பதை காட்டினால்தான் படத்தில் சுவாரஸ்யம் இருக்கும். ஏற்கனவே கார்த்தி இல்லாத சூழ்நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் கழட்டி விட்டது படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக குறைந்து விட்டது என்றே சொல்லலாம்.