திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விடாமுயற்சி தாமதம் ஏன்? கேட்டதும் கொடுக்கல, சொன்னதும் செய்யல.. லைகா மீது உச்சகட்ட கோபத்தில் அஜித்

அஜித்குமார் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் ஒரு புதிய படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித்துக்கு பிடிக்கவில்லை. அதனால் கதையை மாற்றும்படி கூறியும் கேட்காததால் அவரை நீக்கிவிட்டார் அஜித்.

இப்படி படம் ஆரம்பிக்கும் போதே பிரச்சனையோடு ஆரம்பித்த இப்படத்தின் அடுத்து இயக்குனர் மகிழ்திருமேனி உள்ளே வந்தார். அவர் குறைந்த நாட்களில் கதை, திரைக்கதைய ரெடி செய்து, அஜித்திடம் கூற அவருக்குப் பிடித்துப் போகவே ஷூட்டிங்கும் ஆரம்பிக்கப்பட்டது. அப்படம் தான் விடாமுயற்சியாக உருவாகியுள்ளது.

ஆனால் வேட்டையன், இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களை ஒரே நேரத்தில் லைகா தயாரித்து வந்த நிலையில், பைனான்ஸ் காரணமாக சில நாட்களுக்கு ஷூட்டிங் நடக்கவேயில்லை. அப்போதே அஜித் கடுப்பானார். அதேபோல் சில மாதங்களில் முடிக்க வேண்டிய விடாமுயற்சி படம் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருவதால் அடுத்த அப்டேட் கேட்டு ரசிகர்களும் அடம்பிடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. மீதமுள்ள ஷூட்டிங், போஸ்ட் புரடக்சன் பணிகள் எல்லாம் முடிந்து இப்படத்தை அடுத்தாண்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இப்படம் தாமதமானதற்கு அஜித் லைகா நிறுவனம் மீது கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து சினிமா விமர்சகர் பிஸ்மி கூறியதாவது

’’விடாமுயற்சி படத்தின் கதையை விட விடாமுயற்சி படத்தை எடுக்க நடக்கும் கதைகள் தான் திருப்பங்கள் நிறைந்த கதையாக இருக்கிறது. மீண்டும் இதில் நடிக்க அஜித் டிசம்பரில் டேட் கொடுத்திருப்பதாகவும், ஆனால், குட் பேட் அக்லியில் பெரிய தாடியுடன் நடித்து வரும் நிலையில், விடாமுயற்சியில் அளவான தாடியும் நடிப்பதால் அப்படத்தை முடித்து விட்டுத்தான் விடாமுயற்சிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது. தீபாவளிக்கு விடாமுயற்சி படத்தின் டீசர் ரிலீசாகும் என சொன்னீர்கள். அது வெளியாகவில்லை.

அடுத்தாண்டு ஜனவரியில் அஜித் கார் ரேஸுக்கு போகிறார். இதனால் விடாமுயற்சி மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. இப்படம் இவ்வளவு தாமதம் ஆனதற்குக் காரணம் லைகா தான் என அஜித் காதுக்கு தகவல் போனது.

இதனால் லைகாவின் மீது கோபத்தில் இருக்கும் அஜித்துக்கு அடுத்த லைகாவுக்கு கால்ஷூட் கொடுப்பாரா என்பதே சந்தேகம் தான் எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே விஜயின் கத்தி, ரஜினியின் வேட்டையன் ஆகிய படங்களுக்கும் எதோ கொடுக்கல் வாங்கல், சம்பள பாக்கி உள்ளிட்ட பிரச்சனைகளை லைகா சந்தித்த நிலையில், விடாமுயற்சியிலும் இதே பிரச்சனை தான்.

அஜித்துக்கு ஒரு படத்தில் நடிக்க மாதம் 5 கோடி என கொஞ்சம் கொஞ்சமாக சம்பளத்தை மொத்தமாக கொடுப்பதாக கூறியிருந்த நிலையில், இதை நம்பி லண்டனில் அஜித் ஒரு சொத்து வாங்க முயற்சித்தார். ஆனால் அந்த விவகாரத்தில் அஜித்துக்கு லைகா உதவிவில்லை. சம்பளமும் இழுபறி, சொன்னபடி லைகா நடக்காது இதெல்லாம் அஜித்தை டென்சனாக்கிவிட்டது. எனவே அஜித் அதிருப்தி ஆனதால் தான் விடாமுயற்சி படம் தாமதம் ஆகிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு படத்தில் இத்தனை பட்ஜெட், சம்பளம் என எல்லாம் முடிவு செய்துதான் படமெடுக்கிறது. ஆனால், இப்பிரச்சனைகளை கடந்து வராமல் அதிலேயே இருந்தால், எப்படி அடுத்து முன்னணி நடிகர்கள் நடிக்க வருவர் என அவர் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News