வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ரஜினி சூப்பர் ஸ்டாராக இருப்பது ஏன்? அவர் மாதிரி யாரும் இருக்க முடியுமா? கோபிநாத் ஓபன் டாக்

ரஜினிக்கு எவ்வளவு பேர், புகழ் இதெல்லாம் கிடைத்தாலும் அதையெல்லாம் தலையில் ஏற்றாமல் இன்னும் சிவாஜிராவ் ஆகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெறுவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. அந்தளவுக்கு உழைப்பு, தியாகம், மெனக்கெடல், வெற்றி தோல்விகளைக் கடந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தல். வியாபார உத்தி, ரசிகர்களை திருப்திப்படுத்துதல், சரியான கதைகளை தேர்வு செய்தல், இயக்குனர், தயாரிப்பாளர்களுடன் ஒத்துழைத்து நடத்தல் இதெல்லாம் முதன்மையாக விஷயங்களாக கருதப்படுகின்றன.

இதில் எதாவது ஒன்றில் சொதப்பினாலும் அவர்களின் சினிமா கேரியல் கேள்விக் குறியாகும். சரியாக படங்கள் அமையாது. ரசிகர்களும் நடிகர்களைக் கொண்டாட மறந்துவிடுவர். ஆனால், பஸ் கண்டக்டராக இருந்து, கே.பாலச்சந்தரால் அபூர்வராகங்கள் படத்தில் அறிமுகமாகி, தன் தனித்துவ நடிப்பு, ஷ்டைல் போன்றவற்றால் 4 தசாப்தங்களுக்கு மேலாக் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த்.

அபூர்வ ராகங்கள் படத்தைத் தொடர்ந்து புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான் ஆகிய படங்களில் தொடர்து நடித்து அடுத்த சில ஆண்டுகளிலேயே சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றார். அப்போதைய சூப்பர் ஸ்டார்களான எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு இருந்த மாஸ், அப்படியே அடுத்த தலைமுறை நடிகர்களான கமல், ரஜினிக்கு மாறினர்.

அப்போது தொடங்கி இன்றுவரை கமலும் ரஜினியும் இத்தனை ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தபோதிலும் அவர்களின் ரசிகர்கள் அவர்களைப் போட்டியாளர்களாகவே பார்க்கின்றனர். இவர்களுக்கு அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜித்திற்கு அதே அளவு மாஸ் ஆடியன்ஸ் பெருகிவிட்டனர்.

ஆனால், சூப்பர் ஸ்டார் பட்டம் இன்றுவரை ரஜினிகாந்துக்கு மட்டும் தமிழ் சினிமாவில் அழைக்கப்படுகிறது. அப்பட்டத்தை வேறு நடிகர்களுக்கு கொடுத்தால் ரஜினி ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள். அந்தளவுக்கு இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுக்கு ரஜினி சினிமாவில் சம்பளத்திலும் சரி, படங்களின் பாக்ஸ் ஆபீஸிலும் சரி டஃப் கொடுத்து வருகிறார்.

ரஜினியின் அண்ணாத்த, தர்பார் படங்கள் கலவையான விமர்சிக்கப்பட்டாலும், அடுத்து வந்த ஜெயிலர் தமிழ் சினிமாவில் 600 கோடிக்கு மேல் குவித்தது. சமீபத்தில் வெளியான வேட்டையன் படம் கலவையான விமர்சிக்கப்படாலும் வசூல் குவித்து வருகிறது. அடுத்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த் பற்றி கோபிநாத் கூறியதாவது;

இந்த நிலையில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்குப் பொருத்தமானவர் என்று பிரபல பேச்சாளரும் ’நீயா நானா ’நிகழ்ச்சித் தொகுப்பாளருமான் கோபிநாத் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; ’’ரஜினி சார் என்னை அவ்வப்போது அழைத்துவிடுவார். நான் போய் அவரை சந்திப்பேன். பாப்பா பிறந்தபோது அவரை சந்தித்தேன். அவரை ஒவ்வொரு முறை சந்திக்கும்போது புகைப்படம் எடுக்கும் ஆசை எனக்குள் இருக்கும். ஆனால், நானும் மீடியாவில் இருப்பதால் எப்படி அதைக் கேட்பது என்று தயக்கம் இருக்கும்.

எப்படி அதை அவரிடம் கேட்பது என்ற சங்கோஜமும் இருக்கும். இதைப் புரிந்து கொண்டு, அவரது உதவியாளரை அழைத்து, என்னையும் கோபியையும் ஒரு போட்டோ எடுங்க என்பார். அவர் அப்படிப்பட்டார். தம்பி நீ எப்பயும் உன் உயரத்துக்கு மேல போகக் கூடாது என்பதுபோல் அவரது உயரிய கொள்கையை மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்த நோக்கில் வைத்திருப்பதால் தான் அவர் சூப்பர் ஸ்டார். அவர் எப்படி கூறும்போது என் ஈகோ எல்லாம் உடைந்துவிடும்’’ என்று தெரிவித்துள்ளார்.

gobinath

Trending News