வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வெற்றிமாறன் ஏன் அப்படி நடந்துகிட்டாரு? உதவி இயக்குனர்கள் அடிமையா? அந்தணன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் விடுதலை 2. இப்படத்தில் மஞ்சு வாரியர். சூரிய சேதுபதி, ராஜிவ் மேனன், கெளதவ் மேனன், தமிழ், அட்டகத்தி கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். வெற்றிமாறன், எல்ரெட் குமார் சந்தானம் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். விடுதலை 1 & 2 ஆகிய படங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு மேலாக ஷூட்டிங் நடந்த நிலையில், இன்னும் ஷூட்டிங் பாக்கி உள்ளது என சமீபத்தில் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் கூறியிருந்தார்.

எனவே விடுதலை முதல் பாகமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2வது பாகமும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சமீபத்தில் வெளியான தினம், தினமும் பாடலும் சூப்பர் ஹிட்டானது, ட்ரெயிலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாவது;

இந்த நிலையில், விடுதலை 2 பட நிகழ்ச்சியின் போது விஜய்சேதுபதி பேசியதற்கு வலைப்பேச்சு அந்தனன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : “வட சென்னை பட 2 வது பாகம் எப்போது என வெற்றிமாறனை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். விடுதலை படம் மாதிரியே அப்படம் எடுக்கும் போது மீதமான புட்டேஜும் உள்ளது. அதுவும் வர வெற்றிமாறன் முன்வர வேண்டும்.

வெற்றிமாறன் எப்பவும் அல்டிமேட். விடுதலை 2 டிரெயிலர் பிரமாதம். இளையராஜாவின் இசையும் மேஜிக் தான். இந்த மாதிரி நிகழ்ச்சியில் இயக்குனர் பேசும் போது கையில் குறிப்பெடுப்பார்கள். இதில் 450 பேர் பணியாற்றியுள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில் மஞ்சு வாரியர் பெயரை விட்டு விடவே, பின்னால் இருந்தவர் கூற, அதையே வெற்றிமாறன் கூறிவிட்டார்.

திரும்ப இன்னொருவர் பெயரை கூற, வெற்றிமாறன் அப்செட் ஆனார். ஒரு படைப்பாளி, எல்லோரும் மதிக்கக் கூடிய அவர் எப்படி இப்படி நடந்து கொண்டால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பர். கோபப்படும்படி அங்கு ஒன்னுமே நடக்கவில்லை. பல இயக்குனர்கள் உதவி இயக்குனர்களை அடிமைகளாகவே நடத்துகிறார்கள். மேடையிலேயே உதவி இயக்குனர்களை அதட்டினால் ரூம்பில் எப்படி நடத்துவீங்க? காலங்காலமா உதவி இயக்குனர்களை அனுபடிக்க கொடுமையை மேடையில் அரங்கேற்றிதாகத்தான் நான் பார்க்கிறேன்” என்று கூறினார்.

மஞ்சு வாரியர் பெயரை சொன்னவுடன் கூறிய வெற்றிமாறன், இன்னொருவர் கூறிய பெயரையும் சொல்வற்கு என்ன என கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலை படத்திற்காக இத்தனை ஆண்டுகள் உழைத்த எல்லோரின் பெயரும் இடம்பெற வேண்டும் என எதிர்பார்ப்பது சரிதானே. அப்படி கூறினால் என்ன? என பலரும் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

அதான் விடுதலை 2 படத்திற்கு உழைத்த எல்லோரையும் டீம் என்று பொதுவாக குறிப்பிட்டு விட்டாரே அவருக்கு ஆயிரம் டென்சன், வேலைகள் இருக்கும், இதையெல்லாம் பேச வேண்டிய அவசியம் இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Trending News